12003 – விவேகப் பரீட்சைகளும் பொது அறிவும்

ஏ.யு.யோண்பிள்ளை. இளவாலை: ஏ.யு.யோண்பிள்ளை, தலைமை ஆசிரியர், இளவாலை கன்னியர் மட ஆசிரியர் கழகம், 1வது பதிப்பு, 1939. (யாழ்ப்பாணம்: புனித ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
162 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ.


நூலாசிரியர் தனது 15 ஆண்டுகால ஆசிரிய கலாசாலை ஆசிரியத்துவ அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தான் கண்டறிந்த பரீட்சை வழிவகைளைப் பயன்படுத்தி இந்நூலை ஆக்கியுள்ளார். விவேகப் பரீட்சையும் அதன் வரலாறும், விவேகத்தை மட்டிடுதல், கற்பனைப் பரீட்சைகள், ஒப்புநோக்கும் பரீட்சைகள், பதார்த்தப் பரீட்சைகள், வசன அர்த்தப் பரீட்சைகள், வாக்கியம் ஒழுங்குசெய்தல், கணிதவகைப் பரீட்சைகள், உயர்தரக் கணிதவகை, கணித கடவகை, தருக்கப் பரீட்சை, நியாய விரோதப் பரீட்சை, நியாயப் பிழைகள் காணல், தருக்கத் தெரிவுப் பரீட்சைகள், சாதாரண நியாயித்தல், படப் பரீட்சைகள், பொதறிவுப் பயிற்சி, பொதறிவு வினாக்கள், பொதறிவு வினாக்களின் விடைகள் ஆகிய 19 அத்தியாயங்களில் விவேகப் பரீட்சைகள்ஃபொது அறிவு பற்றி விளக்கியுள்ளார். விளக்கப்படங்களாக விவேக பரிசோதனை பீடம், எண்ணூடாட்டம், பரப்பளவை வடிவங்கள், எதிர்நோக்குச் சொட்டெண், நட்சத்திர நிலைகள், கணித விகடப்படங்கள், கணிதக் கயிறிழுப்பு, படப் பரீட்சைகள், டெல்ற்றா ஆற்றிடை மேடு, இலங்கையின் வெட்டுமுகம், அமெரிக்காவின் ஆகாய விமான பாதை, மழைமுகம்ஃமழை நிழல் ஆகியன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2250).

ஏனைய பதிவுகள்

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,

14742 இந்த மண்ணும் எங்களின் சொந்த மண் தான்.

இணுவில் ஆர்.எம். கிருபாகரன். சென்னை 600037: இராமநாதன் பதிப்பகம், நெ.25, 3வது தெரு, ஆபீசர்ஸ் காலனி எக்ஸ்டென்ஷன், முகப்பேர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xvi, 160 பக்கம், விலை:

14062 இலங்கையில் சைவ வாழ்வு.

பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 13: பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா, 136/28, ஜோர்ஜ் ஆர்.த.சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: ஓட்டோ பிரின்டர்ஸ்). viii, 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு:

12383 – கூர்மதி (மாணவர் சிறப்பு மலர்): 2005.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்), திருமதி ஜீ.தெய்வேந்திரராசா, பி.இராசையா (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 12: கிறிப்ஸ் பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 162, டாம்

14604 சிவப்பு டைனோசர்கள்.

சு.தவச்செல்வன். நுவரஎலிய: பெருவிரல் இலக்கிய இயக்கம், கொட்டகலை தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2013. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xi, 85 பக்கம், விலை: ரூபா