12057 – திருத்தொண்டர் திருநெறி: ஆய்வரங்கச் சிறப்பிதழ்-2017.

க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 106 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-9233- 46-6.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2017இல் ஒழுங்குசெய்திருந்த வருடாந்த கருத்தரங்கினையொட்டி வெளியிடப்பட்ட இச் சிறப்பு மலரில் பெரியபுராணம் தொடர்பாக ஏற்கெனவே புலமைசான்ற பெரியோரினால் எழுதப்பெற்றிருந்த சில கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளனர். சேக்கிழார் நாயனார் வரலாறு (க.வெள்ளைவாரணன்), சேக்கிழார் நாயனார் காலம் (க. வெள்ளைவாரணன்), திருத்தொண்டர் புராணம் (மு.அருணாசலம்), மூலங்கட்கும் பெரிய புராணத்திற்கும் உள்ள வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் (மா.இராசமாணிக்கனார்), அடியார்கள் யார்? (அ.ச.ஞானசம்பந்தன்), பெரிய புராணத்தின் காப்பிய மாண்புகள் (அ.அ.மணவாளன்), பெரியபுராணம் (பாலூர் கண்ணப்ப முதலியார் (ஆங்கிலமூலம்), சா.திருவேணி சங்கமம் (தமிழாக்கம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இம்மலரில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்