12080 – நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன்.

கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ். வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக்குழு, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4745-03-2.

சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளரும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வழிவழி அறங்காவலர்களில் ஒருவருமான கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களால் எழுதப்பெற்று, ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளிலே வெளிவந்த கட்டுரைகளும், சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நயினாதீவு குறித்த ஆய்வுகளுக்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும், மணிபல்லவம் என்பது நயினாதீவே, நயினை நாகபூஷணி, அற்புதத் தெய்வம் நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள், சீறிடும் நாகபூஷணித் தாய், குடமுழுக்குக் காணும் சக்திபீடம் நயினை நாகபூஷணி அம்மன், நயினை ஸ்ரீ நாகபூஷணியின் பத்ம பாதங்களில் ஆனந்த அருவியுடன் மலரிட்ட அந்தண திலகம், நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் தேர்த்திருவிழாச் சிறப்பிதழ், சர்வமத சந்நிதி நயினைப்பதியின் சிறப்பு, Let us pray to Nagapooshani Ambaal ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற பத்துக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

12809 – பரதேசம் போனவர்கள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்). 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-01-5. நூலின்

12577 – விளங்கிக் கொண்டு கருத்து வெளியிடுதல் -1: மேலதிக மொழி விருத்திப் பாடநெறிதமிழ்.

தேசிய கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. மூன்று

14408 சிங்கள போதினி.

நா.சுப்பிரமணியம். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, ஜுலை 1955. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). (10), 118 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1.00,

14548 மகாபாரதம் சபாபருவ மூலமும் புத்துரையும்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), வ.குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, வண்ணார்பண்ணை மேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 1899. (யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, விவேகானந்த யந்திரசாலை, வண்ணார்பண்ணை மேற்கு). (5), 232 பக்கம், விலை: ரூபா 2.00,

14792 மகளிர் இருவர் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா

14256 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 4-2006).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன்