12091 – இந்து தருமம் 1977 (நடராஜர் சிவகாமியம்மன் மணிவாசகர் குடமுழுக்குச் சிறப்பிதழ்.

வே.தர்மகுலசிங்கம் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்).

xvi, 88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

வாழ்த்துரைகள், ஆசியுரைகள், மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. கனகசபாபதி தரிசனம் ஒருகால் கண்டாற் கலிதீரும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), எமது நாட்டிற் சிவ வழிபாடு (சு.வித்தியானந்தன்), தாண்டவம் புரியும் எமதாண்டவன் (சாம் சண்முகநாதக் குருக்கள்), ஈழநாட்டில் முருக வழிபாடு (ஆ.வேலுப்பிள்ளை), அழகா முருகா தாலேலோ (ப.வேலுப்பிள்ளை), இலங்கையிற் சைவர்கள்: குடிசனப் புவியியல் நோக்கு (பொ.பாலசுந்தரம்பிள்ளை), இந்து மதத்தில் உருவ வழிபாடு (செ.மகேஸ்வரன்), குறிஞ்சிக் குமரன் (வே. இராமகிருஷ்ணன்), அறம் வளர்த்த தமிழ்த் தெய்வம் (ந.நிர்மலன்), ஈழத்துச் சிவாலயங்கள்: கி.பி.1000 முதல் 1300 வரை (சி.பத்மநாதன்), கந்தா நின் அருள் வேண்டும் (த.கலாமணி), மலையகத்து இந்துக்களின் தெய்வங்களும் வழிபாடுகளும் (சி.தில்லைநாதன்), மார்கழி நோன்பு (சிவகாமி கணபதிப்பிள்ளை), பல்கலைக்கழகத்தில் நடராஜர் பிரதிஷ்டை (ச.ஏ.பிரதாபர்), சிற்ப வித்தியாதரன் (இந்து மாணவர் சங்கம்), பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோயிலும் பேராசிரியர் கனகசபாபதியும் (கலையரசி சின்னையா) ஆகிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02539. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008483).

ஏனைய பதிவுகள்

12032 – முக்கிய உபநிஷதங்களின் சாரம்: அத்தியாயம் 5-முண்டகோபநிஷதம்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமி சிவானந்தர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1967. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (4), 27 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12.5 சமீ.+ உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம்,

14317 நீதிமுரசு 1992.

கி.துரைராசசிங்கம் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (160)

Unser Besten Novomatic Spiele

Content Spielbank Bonus Dahinter Tollen Feiertagen Mobile Casino Spiele Ended up being Mächtigkeit Die eine Tagesordnungspunkt Spielautomaten Flügel Leer? Fazit Dahinter Einen Echtgeld Erreichbar Spielautomaten

12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை). 82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12711 – நாடகமும் அரங்கியலும் : 2016 புதிய படத்திடத்துக்கு அமைவானது-தரம் 11.

சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: