மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, மே 2018. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்).
156 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் 19வது சைவமாநாடு 2018 மே 5-6ஆம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், பல்வேறு இந்து சமயக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 05.05.2018 அன்று ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலும் (200A Archway Road, London N6 5BA), 06.05.2018 அன்று லண்டன் லூஷியம் சிவன் கோவிலிலும் (4A Clarendon Rise, Lewisham, London SE13 5ES) இடம்பெற்றது.