12110 – திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்.

எஸ். திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.திருச்செல்வம், தலங்காவற் பிள்ளையார் கோவில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம்).

(52) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

மேற்படி கோவிலில் 17.6.1988இல் நடைபெற்ற சம்புரோஷண மகாகும்பாபிஷே கம், 03.08.1988 அன்று பூர்த்தியாகிய மண்டலாபிஷேகம் ஆகியவற்றின் நினைவாக இக்கும்பாபிஷேக மலர் முரசொலி ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் சிறப்புக் கட்டுரைகளாக காலந்தோறும் விநாயகர் வழிபாடு (ப.கோபாலகிருஷ்ணன்), யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும் (கார்த்திகேசு சிவத்தம்பி), கணபதி (கா.கைலாசநாதக் குருக்கள்), கோயில் வரலாற்றுக் குறிப்புகள் (எஸ்.திருச்செல்வம்), விநாயகர் பரத்துவம் (சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), தலங்காவலான் அற்புத விநாயகன் (நா. சண்முகரத்தினக் குருக்கள்), பிணி தீர்க்கும் பிள்ளையார் (சதா யோகீஸ்வரக் குருக்கள்) ஆகிய ஏழு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9372).

ஏனைய பதிவுகள்

12651 – உயர் கணக்கீடு: உற்பத்திக் கணக்கீடு: அலகு 1-1.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு : அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 46 பக்கம், விலை: ரூபா

12796 – ஒரு பெண்ணின் கதை: சிறுகதைத் தொகுதி.

எம்.எஸ்.அமானுல்லா. மூதூர் 5: எம்.எஸ்.அமானுல்லா, 162, அரபுக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (மூதூர்: எஸ்.எச். பிரின்டர்ஸ்). 101 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5 x 14.5 சமீ.,

14736 அவள் (நாவல்).

இ.விஜயேந்திரன் (இயற்பெயர்: இ.இராஜேஸ்வரன்). மல்லாகம்: விஜயா பிரசுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 54 பக்கம், விலை: ரூபா: 1.25, அளவு: 18×12 சமீ. ஆசிரியரின் முதலாவது நாவல்.

12938 – வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு இரா.சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர்-1993.

சபா.ஜெயராசா, செ.சோதிப் பெருமாள், பொ.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: செ.சோதிப் பெருமாள், செயலாளர், மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: ஆ.டீ.Pசiவெநசளஇ 14, சிறில் சி. பெரேரா மாவத்தை). (10), 70 பக்கம், விலை:

12846 – புலவர்மணி கட்டுரைகள்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை (மூலம்), பெ.விஜயரெத்தினம், இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 1998. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12) 159 பக்கம், விலை: ரூபா