12224 – சமாதானத் தூது: கட்டுரைத் தொகுப்பு.

ஜெஹான் பெரேரா (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விஹாரை வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiii, 355 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978- 955-1274-69-6.

தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி ஜெஹான் பெரேரா எழுதிய ஐம்பது கட்டுரைகளின் தமிழாக்கம் இது. வன்னிக்கு மக்களை மையமாக வைத்த அபிவிருத்தியே தேவை, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ள வாதப்பிரதிவாதங்கள், ஐ.நா.நிபுணர் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த சரியான தருணம், பான் கீ மூன் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் நடுநிலையுடன் செயற்படுவோம், சமூகங்களிடையே யான நல்லிணக்கத்துக்கு இன்னொரு பரம்பரை வரை காத்திருப்பதா?, இன்றைய நடைமுறையின் இரட்டைத் தன்மை, ஐ.நா.நிபுணர் குழுவினருடனான சிக்கலை சமாளிக்கக்கூடிய வழிமுறைகள், தனிப்பட்ட அறிவுரைகள் மட்டும் பல்லின மக்களின் மனதை வெல்லாது, அரசு சாரா நிறுவனங்கள் மீதான அரசின் புலனாய்வு விசாரணை, உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியை அரசு அர்த்தமுடையதாக்க வேண்டும், இலங்கையின் புதிய எதிர்பார்ப்பு, இலங்கையின் மதிப்பு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவது ஏன்? என்பன போன்ற ஐம்பது தலைப்புகளில் இவரது ஆக்கபூர்வமான கட்டுரைகள் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

14053 வெசாக் சிரிசர 2000.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2000. (கொழும்பு: ANCL,

12256 – மேதின வரலாறும் அதன் போதனைகளும்.

வீ.எல்.பெரைரா (பொதுச் செயலாளர்). கொழும்பு 12: மலையக இளைஞர் பேரவை, 74. 2/1, டாம் வீதி, 1வது பதிப்பு, மே 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5

14559 அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80

14038 மகா வாக்கியங்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vi, 104 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு:

12825 – புகையில் தெரிந்த முகம்.

அ.செ. முருகானந்தன். கொழும்பு: நவலட்சுமி புத்தகசாலை, 136 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1950. (கொழும்பு: சுதந்திரன் அச்சகம்). viiiஇ 48 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18 x 12