12250 – பொருளாதாரம்: பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பாடநூல்.

அல்பிரட் W.ஸ்டோனியர், டக்ளஸ் சி.ஹேக். கொழும்பு 5: அரச கரும மொழித் திணைக்களம், 5, தி.பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1963. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

xx, 630 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

Alfred W. Stonier, Douglas C.Hague ஆகிய இருவரும் எழுதி Longmans Green and Co. Limited நிறுவனத்தால் வெளியிடப்பட்ட A text book of Economic Theory என்ற நூலின் தமிழாக்கம். விலைக் கொள்கை என்ற பகுதி 1இல் தேவையும் விநியோகமும், நுகர்வோனின் தேவை, சமநோக்குக் கோட்டு ஆராய்ச்சி, இரு பொருள்களுக்கு மேற்பட்ட நிலையில் நுகர்வோனின் சமநிலை, கம்பனியின் சமநிலை, கைத்தொழிலிலே போட்டி, போட்டிச் சமநிலை, ஏகபோக உரிமை, ஏகபோக உரிமைப்போட்டி, விளைவு விதிகள், இறுதிநிலை விளைதிறன், சம்பளங்கள், வாடகை, வட்டி, இலாபங்கள், உற்பத்திச் சாதனங்களுக்கிடையேயுள்ள தொடர்புகள் ஆகிய அத்தியாயங்களும், வேலைக்கொள்கை என்ற பகுதி 2இல் சர்வாங்கச் சமநிலையும் வேலையும், பணம், வேலைக் கொள்கை, நுகர்ச்சி, முதலீடு, வட்டிவீதம், கெய்ன்சின் வேலைக் கொள்கையின் சுருக்கம், கேய்ன்சும் பழைய பொருளியலும் ஆகிய அத்தியாயங்களுமாக மொத்தம் 24 அத்தியாயங்களில் இந்நூல் உயர் கல்வி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக விரிவாக எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23595).

ஏனைய பதிவுகள்