12274 – சமூக சேவைகள்: 1998ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கை.

சமூக சேவைகள் அமைச்சு. பத்தரமுல்ல: சமூக சேவைகள் அமைச்சு, 5ஆம் மாடி, செத்சிறிபாய, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

42+90 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

நான்கு பகுதிகளாகக் காணப்படும் இவ்வறிக்கையில் சமூக சேவைகள் அமைச்சு என்ற முதற்பகுதியில், அமைச்சின் பணி, முன்னுரிமை விடயங்கள், குறிக்கோளும் தொழிற்பாடும், நிறுவனக் கட்டமைப்பு, தொழிற்பாட்டுக் கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி தொடர்பாக அமைச்சின் கண்ணோட்டம் ஆகிய விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான அமைச்சின் கீழ்வரும் திணைக்களங்களும் நிறுவனங்களும் என்ற பகுதியில் சமூக சேவைத் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிக்கையிடப் பட்டுள்ளது. அமைச்சின் கீழ்வரும் செயலகங்களும் சபைகளும் என்ற மூன்றாவது பகுதியில் சமூகப் பாதுகாப்புச் சபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், ஊனமுற்ற ஆட்களுக்கான தேசிய செயலகம், தேசிய இடர் நிவாரண முகாமைத்துவ நிலையம் ஆகியவை பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. இறுதிப்பகுதி செயற்பாடு பற்றியதாகும். இதில் நிதி பௌதிகச் செயற்பாடு- 1998, செயற்றிட்டங்களும் ஒதுக்கீடுகளும்- 1999 ஆகிய அறிக்கைகள் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35631).

ஏனைய பதிவுகள்

14427 தமிழ் அகராதியியலின் பரிணாமம் மற்றும் பரிமாணம்: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு-ஆய்வரங்க மலர் (முதலாம் பாகம்).

சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம்

14057 வெசாக் சிரிசர 2005

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே

12455 – உடப்பு தமிழ் மகாவித்தியாலயம : நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004.

நடராஜா பத்மானந்தன் (இதழாசிரியர்). புத்தளம்: பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 103, விவேகானந்தா மேடு). xvii, 148 பக்கம், விலை:

14719 வந்தனா.

நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). 110

12180 – வழிபாட்டுத் திரட்டு.

கா.சிவபாதசுந்தரம் (தலைவர்). யாழ்ப்பாணம்: தையிட்டி இந்து இளைஞர் சங்கம், தையிட்டி, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சு நிலையம்). 72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தையிட்டி, இலங்கையின்

14384 மும் மொழியிலான கலைச்சொற்றொகுதி.

கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2015. (ஹோமகம: சவிந்த கிராப்பிக்ஸ் சிஸ்டம்ஸ், இல. 145, UDA Industrial Estate,கட்டுவான வீதி). x, 417 பக்கம், விலை: ரூபா