12294 – எண்ணக்கரு கற்றல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அம்மா வெளியீடு, இணுவில், மருதனார்மடம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்).

(4), 46 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×12.5 சமீ.

Concept learning என்று வழங்கப்படும் எண்ணக்கரு கற்றல் தொடர்பான கல்வியியல் துறைசார் கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் வழங்கியிருக்கிறார். எண்ணக்கரு கற்றல் தன்னிச்சையான ஒரு செயலன்று, அதிலே பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை உளவியலாளர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். உயிரிகளையும் பொருட்களையும், அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப வேறுபடுத்தி இனங்காண்பதுவும், அவற்றின் பண்புகளைப் பொதுமைப் படுத்துவதுமே எண்ணக்கருக்களைக் கற்றல் எனக்கூறலாம். ஒருவனது வாழ்க்கை பூராவும் எண்ணக் கருவாக்கம் நிகழ்கின்றது. ஆசிரியர் மாணவரிடம் பொருட்கள் பற்றியும், அவற்றின் பண்புகள் பற்றியும் தவறற்ற எண்ணக்கருக்களை உருவாக்க முயலுதல் வேண்டும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38398).

ஏனைய பதிவுகள்

14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி

14176 ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக மலர் -1963.

தேவஸ்தானத்தார். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், கார்யகலாமந்திரம், 1வது பதிப்பு, ஜுலை 1963. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6) 87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 25×19 சமீ. 01.07.1963 அன்று

12674 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2008.

. இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, பிரிவேனா

12854 – ஈழத்து முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்.

எம்.எம்.உவைஸ். பாணந்துறை: எம்.எம்.உவைஸ், ‘மர்கஸி’, ஹேனமுல்லை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை, மருதானை). 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 11.5

14618 தேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு.

ராஜகவி ராஹில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00,