12303 – கல்விக் கொள்கைகள் பாடசாலைப் பரிபாலனம் சம்பந்தமான விரிவுரைகளின் தொகுப்பு.

அரசினர் தமிழர் ஆசிரியர் சங்கம். கொழும்பு 13: அரசினர் தமிழர் ஆசிரியர் சங்கம், 162, ஜம்பட்டா வீதி, 1வது பதிப்பு, மே 1973. (யாழ்ப்பாணம்: கலைவாணிஅச்சகம், 10, பிரதான வீதி).

(16), 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

அரசினர் தமிழர் ஆசிரியர் சங்கம், வடமாநிலக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய விடுமுறைக்காலப் பயிற்சிக் கழகத்திலும் கருத்தரங்கிலும் கல்விக் கொள்கைகள், பாடசாலைப் பரிபாலனம் சம்பந்தமாக விரிவுரையாளர் நிகழ்த்திய விரிவுரைகளின் தொகுப்பு. மேற்படி விரிவுரைகள் யாழ்/வேம்படி மகளிர் கல்லூரியில் 1973, ஏப்ரல் 15,16,17ஆம் திகதிகளிலும், யாழ்/வீரசிங்கம் மண்டபத்தில் 1973ஏப்ரல் 18,19ஆம் திகதிகளிலும் இடம்பெற்றிருந்தன. ‘கல்விக் கொள்கைகள்’ என்ற முதலாம் பகுதியில் கல்வியின் நோக்கங்களும் கல்விக் கொள்கைகளும், மகாத்மா காந்தியின் கல்விக் கொள்கை, பெற்றிக் பிரீபல் (1782- 1852), ரூசோவின் கல்விக் கருத்துக்கள், மேரி மொன்டிசூரி அம்மையாரின் கல்விக் கொள்கைகள், ஜோன் டியூயின் கல்விக் கொள்கை, பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் தொடர்பு, பாடத்திட்ட வகைகளும், பாடத்திட்டம் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விதிகளும், பாடசாலைக் கருமங்களைத் திட்டமிடும்போது கவனிக்கவேண்டியவை, கல்வி முன்னேற்றத்திற்குச் சமூகத்தால் செய்யப்படும் சேவைகள், டோல்ரன் முறையும் தொழில்முறையும், தொழில்முறை, கேள்வி கேட்டல் சம்பந்தமான வழிமுறைகள், பொருளாதார விருத்தியும் கல்வியும், சமூக மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான கல்வித் திட்டத்தினை இயைபுபடுத்தல், கல்வி அமைச்சிலிருந்து பாடசாலை வரையிலான தொடர்பு, இலங்கையின் எதிர்காலக் கல்வித் திட்டம் ஆகிய விரிவுரைத் தொகுப்புகள் காணப்படுகின்றன. ‘பரிபாலனம்’ என்ற இரண்டாவது பகுதியில் கல்விச் சட்டங்கள், பாடசாலைகளின் உட்பரிபாலனம், வரலாற்றுக் குறிப்புகள், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பாடசாலைக் கட்டடங்களும், நியமனம், அரச ஊழியர்களுக்கு அரசியல் உரிமைகள், அவைகளில்/அமைப்புகளில் அங்கத்துவம் வகித்தல் கருத்து வெளியீட்டு உரிமைகளைப் பிரயோகித்தல், பொது நடத்தையும் ஒழுக்கமும், இடமாற்றங்கள், ஒரு பாடசாலையில் வைத்திருக்கவேண்டிய பதிவேடுகளின் அட்டவணை, இருப்புப் பொருட்களின் பதிவேடும் கணக்கீடும் கட்டுக்காப்பும், அரசினர் விடுதிகளும் ஆசிரியர்களும், அரசினர் பாடசாலைகளில் பணம் திரட்டல், சம்பளக் கடன்கள், லோகொர் சீமாட்டி கடன் நிதி, லீவு, புகையிரத ஆணைச்சீட்டு, தொழிற்சங்கம், பொது அறிவு (சுருக்கக் குறிப்புகள்) ஆகிய விரிவுரைத் தொகுப்புகள் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34527).

ஏனைய பதிவுகள்