12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).

(6), 75 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 24.5×18.5 சமீ.

இவ்விதழில் இலக்கியத்திறனாய்வும் உணர்வு நலனும் (க.கைலாசபதி), பொருளியலிற் பொதுக் கொள்கையின் முக்கியத்துவம் (ந.பேரின்பநாதன்), மானிடவியலும் ஆக்க இலக்கியமும் (க.சண்முகலிங்கம்), இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம் (சி.க.சிற்றம்பலம்), வேற்றுமையும் சொல்லொழுங்கும் (யோகேஸ்வரி கணேசலிங்கம்), இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும்: கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டு வரை (ச. சத்தியசீலன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகளுடன், தென்னாசியாவியற் கருத்தரங்கக் கட்டுரைகளான 1970க்குப் பின் ஈழத்து தமிழ் நாவல்கள் (நாகராஜஐயர் சுப்பிரமணியம்), சைவ சித்தாந்த அறிவுக் கொள்கை – காட்சி (சோ.கிருஷ்ணராஜா), பிரதேச நாவல்கள் – யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் (துரை மனோகரன்), யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி (மனோன்மணி சண்முகதாஸ்) ஆகிய நான்கு கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19400. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 000680).

ஏனைய பதிவுகள்

14150 நல்லைக்குமரன் மலர் 2007.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). எiiiஇ 154+ (36) பக்கம், புகைப்படங்கள்,

12132 – காளி ஆச்சி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xx, 92 பக்கம், புகைப்படங்கள், விலை:

12752 – இலக்கிய விழா 1988-1989: சிறப்பு மலர்.

திருமலை நவம், அருள் சுப்பிரமணியம்,பால சுகுமார் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (4), 32 பக்கம்,

14773 நதிமேல் தனித்தலையும் சிறுபுள்.

தேவகாந்தன். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், தேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஜனவரி

14309 உலக வங்கியும் இலங்கையின் வறுமைக் குறைப்பும்.

சீமாஸ் கிளாரி (அபிவிருத்தி ஆலோசகர்), ரிச்சர்ட் றியோச் (தலைவர்), ப்றைன் வோல்ப் (நிறைவேற்று செயலாளர்). லண்டன் ளுறு8 1ளுது: இலங்கைக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், இல. 3, பொண்ட் வே, 1வது பதிப்பு, 1993.