12397 – சிந்தனை: தொகுதி I இதழ் 2 (ஆடி 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).

(7), 154 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா 60., அளவு: 24×17 சமீ.

இவ்விதழில் தமிழ்மொழிப் பாடநூல்களில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் (சு.சுசீந்திரராஜா), விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தமிழ்பேசும் சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்களும் (வே.மணிவாசகர்), வரண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டங்களின் உற்பத்தித் திறனில் தொழில்நுட்பங்களின் பங்களிப்புப் பற்றிய மதிப்பீடு (அ.கணபதிப்பிள்ளை), பிரித்தானிய மலாயாவில் யாழ்ப் பாணத்தவரின் அரசியல் நடவடிக்கைகள்(ச.சத்தியசீலன்), ஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: சில அடிப்படைப் பிரச்சினைகள் (எம்.ஏ.நு‡மான்), யாழ்ப்பாணக் குடாநாட்டில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறை (எஸ்.சிவலிங்கராஜா), யாழ்ப்பாண மாவட்ட மக்களின் இடப்பெயர்வு (கா.குகபாலன்), அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சினைகளும் குடியேற்றப்பிரச்சினைகளும் (எம்.வை.மொகமட் சித்தீக்), பண்டைய ஈழத்து யக்ஷநாக வழிபாடு (சி.க.சிற்றம்பலம்), நாவலரும் சைவசித்தாந்தமும் (கலைவாணி இராமநாதன்), புராண படனம்-அன்றும் இன்றும் (யோகேஸ்வரி கணேசலிங்கம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59120).

ஏனைய பதிவுகள்

12660 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1971.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, மார்ச் 1972. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

13027 செய்தி நடத்துனர் பணியின் அடிப்படைகள்.

ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல. 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).165 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12016 – அக நூல்.

சு.சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம்: சு.சிவபாதசுந்தரம், கந்தவனம், புலோலி, 1வது பதிப்பு, ஐப்பசி 1935. (சென்னை: புரோகிரசிவ் அச்சுக்கூடம்). (7), 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ. இந்நூல் மனிதர் இயல்பைக் கூறுவதால் யாவருக்கும்

14794 மர்ம மாளிகை.

அருள் செல்வநாயகம். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, ஜுன் 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). (4), 243 பக்கம், விலை: ரூபா 2.90,

14356 அணையா விளக்கு 1991-1992: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சிறப்பு மலர்.

மலர்க் குழு. கல்முனை: கார்மேல் பாத்திமாக் கல்லூரி, 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). (10), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. சுவாமி விபுலானந்தரின் தமிழ்த்