12433 வித்தியாதீபம்: இதழ் 1,2: 1994/1995

மலர்க்குழு.வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 5: சரசு பதிப்பகம்).

124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனது இரண்டாவதாண்டு நிறைவை 18.10.1995 அன்று கொண்டாடி மகிழ்ந்தவேளையில் வெளியிடப்பெற்ற கல்லூ ரியின் ஆண்டு மலர். கல்வியியற் கல்லூரிகளும் ஆசிரிய கல்வியும், ஆசிரியர் கல்வி, ஆசிரியரும் மாணவர் பரீட்சையில் சித்தியின்மைக்கான காரணங்களும், நம்நாட்டு எழுத்தறிவு-ஏற்றம் பெற்ற காரணங்கள், இன்றைய நிலையில் பாடசாலையும் சமுதாயமும், கல்லூரியின் உடற்கல்விச் செயற்பாடு, வகுப்பறைக் கற்பித்தலில் நடிப்பு முறையின் முக்கியத்துவம், வினைத்திறன் மிக்க பாடசாலைகளுக்கு தனியார் தொடர்புகளின் அவசியம், இலங்கை கல்வி முறையில் இணைப்பாட விதானம், இன்றைய கல்வி முறை, கற்பித்தல், விளையாட்டுக்களில் விசையும் இயக்கமும், உடற்கல்வியின் தத்துவவியல் அடிப்படை, இசைக்கலை வரலாற்றில் சங்கீதக்கலையின் பெருமை, இருபதாம் நூற்றாண்டில் கவிதை, இசையும் ஆசிரியரும், வீண் வார்த்தையின் விபரீதம், 21ஆம் நூற்றாண்டில் சூழல் மாசடைவதால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், விரிவான முடிவை நோக்கி, பாடசாலைக் கல்வியால் பெறக்கூடிய சிறந்த அனுபவங்கள், நிஜத்தின் தரிசனம், இலக்கணத்தின் அவசியமும் பயிற்றும் முறைகளும் ஆகிய 22 தமிழ்க் கட்டுரைகளும் ஆறு சிங்களக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24512).

ஏனைய பதிவுகள்

14729 கைக்குட்டை: சிறுகதைகள்.

டபிள்யூ. ஏ.சில்வா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச

12391 – சிந்தனை: மலர் 4 இதழ் 1,2 (ஜனவரி-ஜுலை 1971).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1971. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). 102 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2.50,

12222 – இலங்கை அரசியலும் பொருளாதாரமும் (1912-1959).

ஏ.ஜே.வில்சன் (ஆங்கில மூலம்), கு.ஓ.ஊ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

12103 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கோவை: 22ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1997.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ்,

14367 இந்து தீபம்: 2001.

க.முரளிதரன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கொழும்பு: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ்). 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 12.08.2001 அன்று

12997 – ஈழ நாட்டுப் பிரயாணம்.

பகீரதன். சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 1வது பதிப்பு, 1959. (சென்னை: நவபாரத் பிரஸ்). 272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ. இலங்கையின் மலையகம் உள்ளிட்ட