12440 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1991.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

(32) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1991 பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19.7.1991 அன்று பி.ப. 2.30 முதல் மாலை 8.30 வரை, கல்வி இராஜாங்க அமைச்சர் இராசமனோகரி புலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. குழுக்கள், உபகுழுக்கள் மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், ஆசிச் செய்திகள், போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களின் விபரம், நிகழ்ச்சி நிரல் போன்றவற்றை உள்ளடக்கியதாக சிறப்புக் கட்டுரைகள் எதுவுமின்றி இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல்கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28315).

ஏனைய பதிவுகள்

12050 – இலங்கையில் கற்புடைமாதர் வழிபாடு.

க.இ.குமாரசாமி (தொகுப்பாசிரியர், புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: க.இ.குமாரசாமி, அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கைத்

12171 – முருகன் பாடல்: ஐந்தாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள்,

14064 கந்தபுராண நவநீதம்.

ஸ்ரீ காசிவாசி சி.செந்திநாதையர். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). (3), xviii, 145 பக்கம், விலை: ரூபா

12539 – நன்னூற் காண்டிகையுரை

பவணந்தி முனிவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சதாசிவப்பிள்ளை, நல்லூர், 1வது பதிப்பு, சித்திரை 1880. (சென்னபட்டணம்: வித்தியானுபாலன யந்திரசாலை). (6), 400 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×11.5 சமீ.