12448 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 2001.

எஸ்.தில்லைநடராஜா (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).

(4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சம

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 2001இல் நடைபெற்றவேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. அழகியற் கல்வியில் நடனத்தின் முக்கியத்துவம் (லீலாம்பிகை செல்வராஜா), கலைத்திட்டமும் மொழி கற்பித்தலும் (தை.தனராஜ்), தமிழ்த் தின விழா சில சிந்தனைகள் (செ.யோகநாதன்), மெல்லத் தமிழினிச் சாகும் (ரு.டு.அலியார்), தமிழர் மரபில் புலக்காட்சியும் ஆடல் அழகியலும் (சபா.ஜெயராசா), இலக்கியம் கற்பித்தல்: ஏன் எதற்கு (கா.சிவத்தம்பி) ஆகிய சிறப்புக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41194).

ஏனைய பதிவுகள்

14811 வண்டொன்று இரு மலர்கள்(நாவல்).

எம்.சி.ஜெஸீல். கொழும்பு 13: சபிகலா வெளியீடு, 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 13: ஸபீனா அச்சகம், 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு). (8), 67 பக்கம், விலை:

14293 சீனாவுக்கான அமைதிவழி அபிவிருத்தியும் அதன் இரகசியமும்.

ஏ.சீ.எம். இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

12069 – சைவ போதினி-மூன்றாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 9வது பதிப்பு, ஜனவரி 1975, 1வது பதிப்பு, 1967, 2வது பதிப்பு, 1968, 3வது பதிப்பு, 1969, 4வது பதிப்பு, 1970,

12407 – சிந்தனை (தொகுதி VI, இதழ் 1,2).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (6), 119 பக்கம், அட்டவணைகள், விலை:

14492 சுருதி 1996.

மலர்க் குழு. மட்டக்களப்பு: மட்டக்களப்பு விபுலாநந்த அடிகள் இசை நடனக் கல்லூரி, நொச்சிமுனை, 1வது பதிப்பு, 1996. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (10), 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18

14715 மானுடம் தோற்றிடுமோ?.

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xii, 180