சிவா கிருஷ்ணமூர்த்தி (மலர்ஆசிரியர்). கொழும்பு 6: வேலாயுதம் மகா வித்தியாலயம், பழைய மாணவர் சங்கம்-கொழும்பு, 71 v, பீற்றசன் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
xxiv, 157 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ.
வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் 115ஆவது நிறைவு ஆண்டில் கல்லூரி பற்றிய தகவல்களை ஒரு வரலாற்றுத் தொகுப்பாகப் பதிவுசெய்யும் நோக்கத்துடன் இந் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆசிரியர்கள், அதிபர்கள், பழைய மாணவர்கள், அதிகாரிகள் மூலம் சேகரித்த விடயதானங்களைத் தருவதுடன், அறிஞர் பெருமக்களின் ஆய்வுடன் கூடிய கட்டுரைகளையும் இம்மலர் வழங்கு கின்றது. கடந்த கால, நிகழ்காலப் புகைப்படங்களையும் இம்மலரில் காணமுடிகின்றது. வேலாயுதம் மகா வித்தியாலயம் ஆற்றிய சேவைகள், புரிந்த சாதனைகள், முகம்கொடுத்த சோதனைகள், பல்லாண்டு காலம் எடுத்த பெருமுயற்சிகளின் பயனாகக் கிடைத்த வெற்றிகள் என்பன 33 கட்டுரைகளில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. மேலதிகமாக, பிரித்தானியர்கால யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து வியாப்திக்கெதிரான சைவப் பதிற்குறிகள், வடமராட்சியின் கல்வியும் சமூக முனைவுப்பாடும், ஆங்கில மொழி மூலக் கல்வி, செ. கதிர்காமநாதனின் ‘வெறுஞ்சோற்றுக்கே வந்தது” சில பார்வைகள், ஈழத்தின் பழந்தமிழ் இலக்கியம் ஒன்று திருக்கரைசைப் புராணம், பணச்சலவை-ஒரு நோக்கு, வடமராட்சியின் கல்விப் பாரம்பரியம், தமிழ் எழுத்துக்கலையின் தோற்றமும் வளர்ச்சி வரலாறும்-ஒரு மொழியியலாய்வு நோக்கு, அருள் திருமுருகனின் எழிலும், அவன் பெருமையும், செம்மொழி-தமிழ்மொழி-எம்மொழி, அமரர் சின்னையா தேவராசா, இந்துப் பாரம்பரியத்தை வளர்த்த கல்விக் கலைக் கோயில்கள் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49694).