12550 – செந்தமிழ்ப் பூம்பொய்கை பாகம் 3.

ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை, சுதுமலை, 1வது பதிப்பு, 1949. (யாழ்ப்பாணம்: ச. குமாரசுவாமி, சண்முகநாதன் அச்சகம்).

iv, 130 பக்கம், விலை: ரூபா 1.30, அளவு: 21×14 சமீ.

பாடசாலை மாணவர்களின் தமிழ் அறிவை விருத்திசெய்யும் வகையில் உப பாடநூலாகப் பயன்படுத்துவதற்கேற்றவகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. செய்யுட் பகுதியில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, நகர்ச் சிறப்பு, மணவினை, அரசு, கல்வி, மக்கட்பேறு, வீரம், நீதிகள், பல்சுவை ஆகிய செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன. கதைப்பகுதியில் குசேலோபாக்கியானம், நள தமயந்தியர் பிரிவு ஆகிய இரு பாடங்களும், கட்டுரைப் பகுதியில் நாவலரும் பாரதியும் (கா. பொ.இரத்தினம்), சுதந்திர உணர்வு-மொழிபெயர்ப்பு (க.கார்த்திகேசு), இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் (ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை), அருளுடைமை (மு. ஞானப்பிரகாசம்), பொல்லநறுவையும் சைவமும் (சோ.நடராசா), திருவாசகம் (க.கி.நடராஜன்), சிற்றில் சிதைத்தல் (பொ.கிருஷ்ணபிள்ளை), தமிழரின்றொன்மை (செ.இளையதம்பி), கணவரையிழந்தோரும் கைம்மை நோன்பும் (கி.இலட்சுமண ஐயர்), விஞ்ஞானம்-யுத்தத்தின் முன்னும் பின்னும் (செ.வேலாயுதபிள்ளை), உமர்ப் புலவர் (மு.சின்னத்தம்பி), கொடைவள்ளல் (ஏ.ஏ.அப்துல்ஸ் சமது), தாயும் சேயும்-ஓர் அங்க நாடகம் (ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை) ஆகிய 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2601).

ஏனைய பதிவுகள்