12583 – விஞ்ஞான போதினி: 7ஆம் 8ஆம் வகுப்புகளுக்குரியது.

ம.பரமானந்தன், நா.சா.இரத்தினசிங்கம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது திருத்திய பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1959, 2வது பதிப்பு, 1961. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xii, 551 பக்கம், விலை: ரூபா 6.50, அளவு: 19×12.5 சமீ.

வட மாகாண ஆசிரிய சங்கப் பாடத்திட்டத்திற்கு அமைவாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல் இது. பௌதிகவியல், இரசாயனவியல், உயிரினவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. பௌதிகவியல் பிரிவில், வளி, வளியின் உபயோகங்கள், ஈர்ப்பு, அளவைகள், வளி அலகுகள், நிறுவை, அடர்த்தியும் தன்னீர்ப்பும், ஆர்க்கிமிடீசின் விதி, மிதத்தல், சில இலகுவான பொறிகள், புவியீர்ப்பு மையமும் சமநிலையும், வெப்பம், வெப்பநிலை, வெப்பமானிகள், வெப்பத்தின் விளைவுகள், நிலைமாற்றம், உருகுதல், கொதித்தல், ஆவியாகல், பனி, முகில், மழை, மூடுபனி, வெப்ப இடமாற்றுகை, ஒளி, ஒளியின் உபயோகங்கள், ஒளியினது நேர்கோட்டுச் செலுத்துகை, ஒளியும் நிழலும், ஒளித்தெறிப்பு, ஒளிமுறிவு, நிறப்பிரிகை, ஒலி, எதிரொலி, காந்தவியல், நிலைமின்னியல், மின்னோட்டம், மின்கலங்கள் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரசாயனவியல் பிரிவில் மின்னோட்டமும் வாழ்க்கையும், சடப்பொருள், பௌதிக-இரசாயன மாற்றங்கள், மூலகம், கலவைகள், சேர்வைகள், பௌதிக முறைகள், வளியின் இயல்பும் அமைப்பும், ஒட்சிசன், ஐதரசன், நீர், காபனீரொட்சைட்டு, குளோரீன், கந்தகம், கந்தகவீரொட்சைட்டு, அமிலங்கள், சில உப்புகளும் இரசாயன சேர்க்கைகளும் ஆகிய பாடங்களும், இறுதிப் பிரிவான உயிரினவியலில் வாழ்வுள்ள பொருட்களும் வாழ்வற்ற பொருட்களும், தாவரமும் அதன் பகுதிகளும், சிறப்பான தொழில்கள் புரியும் சில வேர்கள், சிறப்பான தொழில்புரியும் தண்டுகள், நலிந்த தண்டுத் தாவரங்கள், இலையும் அதன் தொழில்களும், பூ, மகரந்தச் சேர்க்கை, பழங்கள், பழங்களும் வித்துக்களும் பரம்பல், வித்துக்களும் முளைத்தலும், சூழ்நிலைக் கலைகள், மண், தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம், விலங்குகள் பாகுபாடு, முள்ளந் தண்டுள்ள சில விலங்குகள், பூச்சிகள், தோட்டத்து விலங்கினங்கள் ஆகிய பாடங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33089).

ஏனைய பதிவுகள்

14814 வாழ்க்கைச் சோலை: பாகம் 1.

பூனாகலை நித்தியஜோதி. பண்டாரவளை: ஷிஹாப்தீன், நுஸ்ரத், பதிப்பாளர், தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம், கெப்பெட்டிப்பொல வீதி, பதுளை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (பண்டாரவளை: வடிவேல் இளையராஜா, இராஜ் கிராப்பிக்ஸ்). xii, 88 பக்கம், சித்திரங்கள்,

12999 – தூதர் திலகம் மேதகு செ.இராஜதுரை: மலேசியாவின் ஸ்ரீலங்கா தூதர் 1990-1994.

கு.செல்வராஜு (பதிப்பாசிரியர்). கோலாலம்பூர்: ஜெயபக்தி வெளியீடு, 28&30,Wisma Jaya Bakti, Jalan Cenderuh 2, Batu 4, Jalan Ipoh,51200 KL,1வது பதிப்பு, 1994. (: PercetakanAdvanco Stn Bhd.,23 Jalan Segambut Selatan,

12392 சிந்தனை: மலர் 5 இதழ் 1&2 (ஜனவரி-ஜுலை 1972).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), பி.ஏ.ஹ{சைன்மியா (துணைப் பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). (4), 42

12921 – ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). (7), 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ. இந்நூலாசிரியர் தோழர்

12958 – விபுலாநந்த அடிகளார் நூற்றண்டுவிழா-சிறப்பு வெளியீடு (ஆய்வு கட்டுரைத் தொகுதி).

கி.விசாகரூபன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்). (12), 82 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24

12199 – பட்டம்: சனத்தொகையும் குடும்பநலக் கல்வியும் செயற்றிட்டம்.

மித்தா வீரக்கொடி (மூலம்), M.H.M.யாக்கூத் (தமிழாக்கம்). மகரகம: சனத்தொகையும் குடும்பநலக் கல்வியும் செயற்றிட்டம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்). iv, 154 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: