12596 – உயர்தர மாணவர் பௌதிகம்: வெப்பவியல்.

அ.கருணாகரர் (மூலம்), க.புவனபூஷணம் (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை, 2வதுபதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:நாமகள்அச்சகம்,319,காங்கேசன்துறை வீதி).


iv, (4), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.


க.பொ.த.ப. (உயர்தர) வகுப்புக்குரிய வெப்பவியல் (அனைத்துலக ளுஐ அலகு
முறையில்) பகுதியே இந்நூலாகும். இதன் முதற் பதிப்பு யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி ஆசிரியர் அ.கருணாகரர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் இவ்விரண்டாவது பதிப்பு, அதே கல்லூரியின் ஆசிரியர் க. புவனபூஷணம் அவர்களால் மீள்பார்வையிடப்பெற்று அனைத்துலக முறை பற்றிய புதிய அதிகாரம், அனைத்துலக முறையில் வரையறைகளும் பௌதிக மாறிலிகளும், அனைத்துலக முறையில் பின்னிணைப்பாகப் போதிய பலவினப்பயிற்சிகள் ஆகிய மூன்றும் சேர்க்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. பத்து
இயல்கள் கொண்ட இந்நூலின் அத்தியாயங்கள் வெப்பமானி இயல், திண்மங்களின் விரிவு, திரவங்களின் விரிவு, வாயுக்களின் விரிவு, கலோரியளவியல், நிலை மாற்றம் -ஈரப்பதன், வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு, சமவெப்பமாற்றம் வெப்பஞ்செல்லா நிலைமாற்றம், வெப்பக்கடத்தல்-மேற்காவுகை, கதிர்வீசல் ஆகிய தலைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38537).

ஏனைய பதிவுகள்

12919 – தொண்டர் திலகம்.

எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 32 பக்கம், புகைப்படம்,விலை: குறிப்பிடப்படவில்லை,

12075 – ஆனந்த சாகரம்: அங்குரார்ப்பண சிறப்பு மலர்.

வ.பொ.பரமலிங்கம் (மலர்க்குழு சார்பாக). கொழும்பு 4: சுவாமி ராமதாஸ் பவுண்டேஷன், 42, ஷர்பெரி கார்டின்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு: யூ.கே.பிரின்டர்ஸ்). (4), 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

12146 – திருஞானசம்பந்தர் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்: பதிக விளக்கத்துடன்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: திருமதி குலசிங்கம் காமாட்சிப்பிள்ளை அந்தியேட்டித்தின வெளியீடு, ஆனைக்குட்டி வளவு, இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: தி.குலசிங்கம், 2, மார்ல்பரோ பரேட், பெவர்லி ரோட், பார்மிங், மெய்ட்ஸ்டோன், கென்ட், 1வது பதிப்பு,

12717 – கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி). xi, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

12564 – தமிழ்மொழி வழிகாட்டி.

தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, மீள்பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 1955, 2வது பதிப்பு, 1967. (கொழும்பு 6:

14976 விலாசம் தேடும் விழுதுகள் ரோஹிங்யா.

எஸ்.எல்.மன்சூர். கொழும்பு 9: I.B.H. வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமட்டகொட வீதி). ix, 86 பக்கம், விலை: ரூபா