12630 – குணமாக்கும் மூலிகைகளின் மகத்துவம்.

ஹெமினியா டீ குஸ்மேன் லெடியன் (சிங்கள மூலம்), கே.துரைராஜா (தமிழாக்கம்). நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம், இல. 8, தேவாலய வீதி, பாகொட, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம்).

151 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

மருத்துவ மூலிகைகளின் வல்லமைக்கு வழிகாட்டியான இந்நூலினை திருமதி கே.துரைராஜா தமிழாக்கம் செய்திருக்கிறார். சாதாரணமான நோய்களும் அதற்கான சிகிச்சைகளும், தண்ணீர் சிகிச்சை முறைகள், மருந்துச் செடிகள், இயற்கைஆண்டவரின் வைத்தியன், மூலிகைகளைக் குறித்து வேதம், ஆலோசனைகள், கருத்துக்கள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தமூலிகை வைத்திய நூல் இயற்கையின் குணமாக்கும் மூலகங்களைத் தெரிந்துகொண்டு அதன்படி சாதாரணநோய்களுக்குப் பரிகாரம் செய்துகொள்ளும் வழிவகைகளைக் கூறுகின்றது. இச்சிகிச்சைகளிலே பயன்படுத்தப்படும் தாவரங்கள் இலங்கைத் தெருவோரங்களிலும் தோட்டங்களிலும் எளிதில் கிடைப்பன. இலைகளும் பூக்களும் மரத்தண்டுகளும் அவிக்கப்பட்டு அல்லது இலைகளில் பிழிந்தெடுக்கப்பட்டுப் பெறப்படும் சாறுகள் சாதாரண நோய்களைக் குணமாக்கப் போதிய வல்லமைபெற்றிருந்தும் நாம் அதிக விலைகொடுத்து கடைகளில் செயற்கை மாத்திரைகளையும் வில்லைகளையும் களிம்புகளையும் பயன்படுத்துவதை இந்நூல்வழியாகக் கண்டிக்கும் இந்நூலின் ஆசிரியர், இயற்கை மருத்துவத்தில் வாசகரின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க இந்நூலைப் பயன்படுத்தியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20563).

ஏனைய பதிவுகள்

14716 மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் (கதைகள்).

யதார்த்தன் (இயற்பெயர்: பிரதீப் குணரத்னம்). பிரான்ஸ்: ஆக்காட்டி, 63, Rue de Lisbonne, 77550 Moissy-Cramayel, 1வது பதிப்பு, ஜுலை 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 134 பக்கம்,

14007 உலகத் தமிழர்ஆவணக் காப்பகம்: ஓர் அறிமுகம்.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம். கண்டி: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், ஹெட்டியாவத்தை, முல்கம்பொலை, 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 26 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22X14 சமீ. உலகத் தமிழர்

14182 ஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்.

வ.ஆ.அதிரூபசிங்கம். வல்வெட்டித்துறை: வ.ஆ.அதிரூபசிங்கம், அம்மன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). x, 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14937 தமிழியச் சான்றோர்.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). கிளிநொச்சி: குமரித் தமிழ்ப் பணிமன்றம், 84, ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, மார்கழி 2012. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 91 பக்கம்,

14631 பகலில் காணும் கனவுகள்: கவிதைத் தொகுப்பு-01.

வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

14880 வாழகம், பொருளாதாரம், சமூகம்.

சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).