12641 – சேதனப் பசளைகள்.

S.T.திசாநாயக்க, ராஜகருணா தொலுவீர, சீரங்கன் பெரியசாமி. பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 2000. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை).

(2), 18 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 5.00, அளவு: 21×14.5 சமீ.

மண் சேதனப் பொருட்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள், சேதனப் பசளைகளின் வகைகள், நெற்செய்கையில் வைக்கோலை இடல், தழைப் பசளைகளை இடும்போது அவதானிக்கவேண்டிய அம்சங்கள், கால்நடை எருவைப் பயன் படுத்தும்போது கடைப்பிடிக்கவேண்டிய சில முக்கியமான அம்சங்கள், சேதனப் பொருட்களைக் கூட்டெருவாக்கல் (வீட்டு, நகர்ப்புறக் கழிவுகளுக்கு), கூட்டெருவைத் தயாரிக்கும் முறை, குழிமுறை, குவியல் முறை, அதிக வெப்ப முறை, சிறிளவில் கூட்டெருத் தயாரித்தல்- பீப்பாய் முறை, சேதனப் பசளைகளை மாத்திரம் பயன்படுத்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் சேதனப் பசளைகள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32716).

ஏனைய பதிவுகள்

14930 குருவுக்கான காணிக்கை: சி.க.கந்தசுவாமி.

நித்தியலட்சுமி குணபாலசிங்கம், செ.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்க ட்ரஸ்ட், கொக்குவில் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). v, 69 பக்கம், புகைப்படங்கள்,

12690 – கர்நாடக சங்கீதம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நுண்கலைத் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ்லிமிட்டெட்). (8), 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x

12278 – புதை குழிக்குத் தள்ளும் புகைப்பழக்கம்.

முஹம்மத் ரஸீன்-ஹஸனீ. குருநாகலை: தாருல் குர்-ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவப்பிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், விலை: ரூபா 60., அளவு:

12436 – வித்தியோதயம்: 1976-77-78.

ச.அருட்சோதி, நா.வரதராசா (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxiv, 236 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

14951ஒளிரும் நட்சத்திரங்கள்: கலை இலக்கிய ஆளுமைகள் குறித்த பதிவுகள்.

க.பரணீதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 162 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ.,