12646 – தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம்(உயர்கல்விக்குரியது).

தனேஸ்வரி ரவீந்திரன். யாழ்ப்பாணம்: உயர்கல்வி நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 156 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×15 சமீ.

நிறுவனங்கள் சிறந்த வினைத்திறனை அடைவதற்கு தொழில் வழங்குவோரும் முகாமையாளர்களும் மனித வளங்களை சரியான முறையில் முகாமைசெய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் இன்று மனிதவள முகாமைத்துவம் பிரபல்யம்பெற்ற ஒரு துறையாக வளர்ந்துள்ளது. தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம் (Strategic Human Resource Management) பற்றிய அறிவினை எட்டு அத்தியாயங்களில் இந்நூல் தந்திரோபாய மனிதவள முகாமைத்துவத்திற்கான அறிமுகம், ஊழியரது உரிமைகளை மதித்தலும் ஒழுக்காற்று முறைமையை முகாமை செய்தலும், தொழில் உறவுகளின் இயக்கங்கள், மனக்குறைகளை கையாளுவது தொடர்பான படிமுறைகள், வேலைத்தலத்திலான பாதுகாப்பும் ஆரோக்கியமும், ஊழியர் நலன்களும் சேவைகளும், ஊழியர் வேலையிலிருந்து விலகுதல் தொடர்பான முகாமைத்துவம், சர்வதேசரீதியான மனிதவள முகாமைத்துவம் ஆகிய தலைப்புகளின்கீழ் வழங்குகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39451).

ஏனைய பதிவுகள்

14517 திரைப்படத்துறையில்.

கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (6), 7-96 பக்கம், விலை: ரூபா 450.,

12162 – நினைத்ததை தரும் திருமுறைப் பதிகங்கள்.

ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலஷ;மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: அஷ்டலக்ஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). iv, 71 பக்கம்,

14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112

12032 – முக்கிய உபநிஷதங்களின் சாரம்: அத்தியாயம் 5-முண்டகோபநிஷதம்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமி சிவானந்தர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1967. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (4), 27 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12.5 சமீ.+ உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம்,

14181 ஆரையம்பதியும் ஆலயங்களும்.

பதியூரான் ச.ஜெயந்தன். ஆரையம்பதி: சந்திரசேகரம் ஜெயந்தன், இராஜதுரைக் கிராமம், 1வது பதிப்பு, 2009. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.மட்டக்களப்பின்

12796 – ஒரு பெண்ணின் கதை: சிறுகதைத் தொகுதி.

எம்.எஸ்.அமானுல்லா. மூதூர் 5: எம்.எஸ்.அமானுல்லா, 162, அரபுக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (மூதூர்: எஸ்.எச். பிரின்டர்ஸ்). 101 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5 x 14.5 சமீ.,