12774 – காதல் வந்த சாலை: காதல் கவிதைகளின் சங்கமம்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்ரேர்ஸ், கஸ்தூரியார் வீதி).

viii, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-43074-0-7.

இது ஒரு நெடுங்கவிதைத் தொகுதி. காதல்வயப்பட்ட ஓர் இளைஞனின் கவித்துவ அரிதாரம் பூசிய புதுக்கவிதை வடிவிலான தொடர்ச்சியான ஒரு நெடுங்கவிதையாகக் காணமுடிகின்றது. திரைப்படப் பாடல் வரிகளை நினைவூட்டும் வகையிலும் கவர்ச்சியான இளம் பெண்களின் புகைப்படங்களுடனும் ஜனரஞ்சக வெளியீடாக அமைந்துள்ளது. காதல் உணர்வுகளை மிகத்துல்லியமாக வெளிப்படுத்த கவிஞர் முனைந்துள்ளார். ஒவ்வொரு பக்கங்களும் படங்களையும் அவற்றுக்குப் பொருத்தமான கவிதைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப் பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250627CC).

ஏனைய பதிவுகள்

12249 – பொருளாதாரக் கொள்கைகள்.

ஆனொல்ட் ஹார்பேர்கர், போர்ஜ் லியுங்கிரன், றோபேட் வேட், ஜுவான் கார்லோஸ் டி பப்லோ (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி, டி.தனராஜ் (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601,

12066 – சைவ நெறி: ஒன்பதாம் வகுப்பு.

பதிப்புக்குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 7வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1980, 2வது பதிப்பு, 1982, 3வது பதிப்பு, 1983, 4வது திருத்திய பதிப்பு, 1985, 5வது

12840 – திருக்குறள் (பொழிப்புரை).

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்), வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 2001. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). viii,

14239 ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் இரண்டாவது அசுரகாண்டம் மூலமும் உரையும்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). பருத்தித்துறை: ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள், தருமாலய வெளியீடு, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1909. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 656 பக்கம், விலை: 4ரூபா 8 அணா,

14661 விளம்பரம் ஒட்டாதீர்.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). viii, 46 பக்கம், விலை: ரூபா 150.,அளவு:

14424 இலங்கை மட்டக்களப்பு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மதிப்பீடு.

வே.அந்தனிஜான் அழகரசன். சென்னை 600015: தவத்திரு வே.அந்தனிஜான் அழகரசன், சின்னமலை ஆலயம், சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1976. (சென்னை 600005: வைரம் அச்சகம்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 2.25,