12778 – மழையில் நனையும் மனசு(கவிதைகள் ).

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கல்கிசை: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21நE, ஸ்ரீ தர்மபால வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22 x 15 சமீ., ISBN: 978-955-52975-1-6.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பெண் கவிஞர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியை நிறைவு செய்தவர். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். ‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற தன் முதல் கவிதைத் தொகுதியை 2012 இல் வெளியிட்டவர். தொடர்ந்து சிறுகதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல், நூல் விமர்சனம் எனப் பல்வேறு துறைகளிலும் 9 நூல்களை ஏற்கெனவே வெளியிட்டவர். இக்கவிதைத் தொகுதி இவரது பத்தாவது நூலாகும். ‘என் வாழ்க்கை’ முதல் ‘கவித்துளிகள்’ ஈறாக ரிஸ்னாவின் 78 கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கு கின்றது. தன் கவிதைகளில் அவற்றின் உள்ளடக்கத்துக்கும், உருவத்துக்கும் சமமான முன்னுரிமை வழங்கியுள்ளார். கவிதைகளின் உள்ளடக்கமாக காதல், சோகம், பெண்ணியம், சமூகவியல், சர்வதேசம் எனத் தளங்கள் பரந்து விரிகின்றன. தனது எழுத்துக்களின்மூலம் சமூக மாற்றத்தைத் தூண்ட இவர் முனைவது அவரது சில கவிதைகளில் புலனாகின்றது. பெரிய புள்ள என்ற கவிதையில் தன் பால்ய வயது ஞாபகங்கள் இரைமீட்கப்படுகின்றன. மலைநாட்டிலும் சுனாமி என்ற கவிதை மலையக மக்களின் பொருளாதார வறுமையைப் பாடுகின்றது. சிறகொடிந்த பறவையின் பாடல், குறியீட்டுக் கவிதையாக அமைந்துள்ளது. எதிர்காலக் கனவில் லயித்திருக்கும் ஒரு காதலியின் நினைவுகளாக உடன்பாடுகள் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62114).

ஏனைய பதிவுகள்

12573 – மொழிப் பயிற்சி:உயர்தர வகுப்புகளுக்குரியது.

வ.நடராஜன், சு.வேலுப்பிள்ளை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (8), 176 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21×13.5 சமீ. மொழிப் பயிற்சி ஆறாம்

14493 நெய்தல்: நான்காவது ஆண்டு மலர்.

மு.புஷ்பராஜன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நெய்தல் வளர்பிறை மன்றம், குருநகர், 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. தொகுப்பாளர் கருத்து (மு.புஷ்பராஜன்), நெய்தல் வளர்பிறை

14705 நிலவுக்குள் சில ரணங்கள் (சிறுகதைத் தொகுதி).

வஸீலா ஸாஹிர். நீர்கொழும்பு: பைந்தமிழ் பதிப்பகம், 121, கல்கட்டுவ வீதி, பெரியமுல்லை, 1வது பதிப்பு, ஜுன் 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யூபிரின்ட், 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி). vii, 56 பக்கம், புகைப்படங்கள்,

14980 திருக்கோணேஸ்வரம் கையேடு: திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவேடு.

நினைவு மலர்க் குழு. திருக்கோணமலை: நாகராஜா கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). (30) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ. திருக்கோணமலையைச் சேர்ந்த திருமதி

14154 நல்லைக்குமரன் மலர் 2017.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiv, 264 + (40) பக்கம், புகைப்படங்கள்,