12804 – சுவடுகள்: சிறுகதைத் தொகுப்பு.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி பரமேஸ்வரி இளங்கோ). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. பிரின்டர்ஸ், 82, T.G. சம்பந்தர் வீதி).

xvi, 139 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4628-34-2.

சமகாலச் சிறுகதைகளின் செல்நெறி பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் செ. யோகராசா, கணிசமான படைப்புக்கள் போர்க்காலத்துடன் அல்லது போருக்குப் பிற்பட்ட காலத்துடன் தொடர்புபட்டவை. அல்லது, நீண்டகால சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசுபவையே என்று கூறுகிறார். இத்தகைய செல்நெறிச் சூழலில் மதுபாரதியின் சிறுகதைகளில் பாதிக்கு மேற்பட்டவை கல்வியியல் மற்றும் பாடசாலைச் சூழல் சார்ந்தவையாக உள்ளன. ஆசிரியரின் மனதில் நெருடிய உண்மைச் சம்பவங்களே கதைகளின் கருவாயமைந்துள்ளன. அக்கினிக் குஞ்சொன்று, எல்லாம் நன்மைக்கே, இனி அவன், இன்னொரு தாயாக, அவரா இவர், நெஞ்சமெல்லாம் ஓர் நிறைவு, கடைப்பார்வை, ஆசான், அந்தியில் ஓர் விடியல், ஆசிரியர்களை எனக்குப் பிடிக்காது, சுவடுகள், ஒப்பன்னா, நிலா எனும் அரிவை, நேசமுடனொரு நினைவதுவாகி, காதல் போயின் ஆகிய 15 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏறாவூர் எல்லை நகரைச் சேர்ந்த மதுபாரதி எண்பதுகளிலிருந்து எழுதிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்