12824 – சூனியத்தை நோக்கி.

ஜுனைதா ஷெரீப். காத்தான்குடி: ஜுனைதா ஷெரீப், 27, லேக் றைவ், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: யூ.டீ.எச்.கம்ப்யுபிரின்ட், 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).

xiii, 210 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-38432-0-3.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வரலாற்றுச் சோகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரின் ‘சோனகத் தெரு’வில் வாழும் குடும்பமொன்றின் கதையாக இந்நாவல் தொடர்கின்றது. அங்குள்ள பள்ளிவாசல்கள், கடைத்தெரு, மக்களின் வாழ்க்கை முறை என்பன இலக்கியநயத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரியில் வசிக்கும் மற்றொரு குடும்பம் சோனகத் தெரு வியாபாரத்தோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவாகவும் மாறுகின்றது. குடும்பத்தின் புதிய தலைமுறைக்குள் உருவாகும் காதலும் இக் கதையை சுவாரஸ்யமாக்குகின்றது. நம்பிக்கைக்குரிய தமிழர்கள் உறவும் சிங்கள நண்பர்களின் உறவும் இணைந்த யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் வாழ்க்கை நாவலின் முதற்பாகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து இருமணிநேர அவகாசத்தில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட அவலம் இரண்டாவது பாகத்திலும் விரிகின்றது. அகதி வாழ்க்கையில் அவர்கள் பட்ட அவஸ்தை, அவலம் என்பன இரண்டாம் பாகத்தை உணர்ச்சிபூர்வமாக்குகின்றது. எப்படி யாயினும் இந்தக் கொடூரமான துயரத்தினூடாகவும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றித்திருக்கும் உழைப்பும் கல்வியும் தளராத தன்னம்பிக்கையும் நாவலின் கதாபாத்திரங்களினூடாக சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261874CC).

ஏனைய பதிவுகள்

14997 ஆமாம் கனம் நீதிபதி அவர்களே (ஒரு மூத்த வழக்கறிஞரின் அனுபவச் சிதறல்கள்).

இரா. காந்தி. சென்னை 600 094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 600 094:

12435 – வித்தியோதயம்: 1975-1976.

பொ.இரத்தினசிங்கம், நி.சரவணபவான் (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1976. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). xix, 214 பக்கம்,

12952 – பண்டிதர் சி.அப்புத்துரை: ஓர் ஆய்வு.

கலைமதி மகேஸ்வரன். யாழ்ப்பாணம்: பண்டிதர் சி.அப்புத்துரை பவளவிழாச் சபை, இளவாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xvi, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14

14144 நக்கீரம் 1995.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

14309 உலக வங்கியும் இலங்கையின் வறுமைக் குறைப்பும்.

சீமாஸ் கிளாரி (அபிவிருத்தி ஆலோசகர்), ரிச்சர்ட் றியோச் (தலைவர்), ப்றைன் வோல்ப் (நிறைவேற்று செயலாளர்). லண்டன் ளுறு8 1ளுது: இலங்கைக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், இல. 3, பொண்ட் வே, 1வது பதிப்பு, 1993.