12826 – பேஸ்புக்கில் அந்த அழகிய முகம்.

வி.ஜனகன். கொழும்பு: மஸ்ட்ரோ மயின்ட்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கொழும்பு: தேவி அச்சகம்).

170 பக்கம், விலை: ரூபா 325.00, அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-725-500-2.

‘உங்களை நீங்கள் விரைவில் அறிந்துகொள்ளத் தவறுவீர்களானால் வேறு ஒருவர் உங்களை தனது அடையாளத்திற்காக பயன்படுத்திக்கொள்வார்’ என்ற அறிவுரையை இந்நாவல் வழியாகச் சொல்லமுனைகிறார் இந்நாவலாசிரியர். யாழ். இந்துக் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத்தேர்ந்து ஐனுஆ நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் ஜனகனின் இலக்கியப்பாதை பள்ளிப்பருவத்தில் கையெழுத்து நூல்களை எழுதுவதில் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். தற்கால இளைஞர்களை கவரும்வகையில் தமிழ் ஆங்கில உரைநடையில் கலந்து எழுதப்பட்டுள்ள நாவல் என்ற வகையில் இது வித்தியாசமானதொரு முயற்சி. உதாரணத்துக்குச் சில வரிகள்: ‘பொதுவாகவே மென்நிற ளாசைவகளை மட்டுமே விரும்பி அணியும் அனந்தயன் இன்றும் மெல்லிய நீலநிற ‘ஆயசம ரூ ளுpநnஉநச’ டிசயனெ ளாசைவ ஒன்றினை அணிந்திருந்தான். நிச்சயமாக அவன் டுழனெழn இற்குப் போனதே இல்லை. ஆனால் அந்த டுழனெழn டிசயனெ ளாசைவ இனை அவனுடைய நண்பனே டுழனெழn இல் இருந்து அவனுடைய பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருந்தான்’. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61520).

ஏனைய பதிவுகள்

12704 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்3: அக்டோபர்-டிசம்பர்-2002.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்).சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு:விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை: கணேசமூர்த்தி,ஜோதி என்டர்பிரைசஸ்). 175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12280 – பசுமை:உலக சூழல்தின சிறப்பிதழ் 2001.

மலர்க் குழு. கொழும்பு 4: கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: ஏ.எஸ்.சற்குணராஜா, எஸ்.பிரின்ட்). ix, 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. கொழும்பு இந்துக்

14743 இரண்டகன்?.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு டிசம்பர் 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN:

14922 இப்றாஹீமின் இலட்சியக் கனவுகள்.

ஏ.எம்.எம்.அலி (தொகுப்பாசிரியர்). கிண்ணியா 4: ஷரீபா வெளியீட்டகம், 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950.,

12411 – சிந்தனை தொகுதி XIII, இதழ் 1.(மார்ச் 2000).

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி). 101