12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

xxxviஇ 312 பக்கம், விலை: கனேடிய டொலர் 35., அளவு: 21 x 14 சமீ.

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு புராணம் ஆகிய மூன்று கிறித்தவ இலக்கியங்களையும் விரிவாக ஆய்வுசெய்து தனி நூலாக ஆசிரியர் வழங்கியிருக்கிறார். நான் கண்ட தேம்பாவணி, முதலாவது வீரமாமுனிவரின் தேம்பாவணி, தேம்பாவணி இலக்கிய நூலாராய்வு, தேம்பாவணி நூல் வரலாற்று ஆய்வு, தேம்பாவணி நூல் ஆசிரியர் வரலாறு, தேம்பாவணி நூற்பதிப்பு வரலாற்று ஆராய்வு, தேம்பாவணி நூலடக்கப் பொது ஆராய்வு, தேம்பாவணி முதற் காண்ட ஆராய்வு, தேம்பாவணி இரண்டாம் காண்ட ஆராய்வு, தேம்பாவணி மூன்றாம் காண்ட ஆராய்வு, முடிவுரை பற்றிய ஆராய்வு என தேம்பாவணியின் பல்வேறு கூறுகளையும் தனித்தனி இயல்களாகப் பிரித்து ஆய்வுசெய்துள்ளார். அவ்வாறே இரண்டாவது கிறிஸ்தவக் கம்பனின் இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய யாத்திரிக இலக்கிய நூல்ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக நூலாராய்வு, நூலாசிரியர் வரலாற்று ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக பருவங்களின் ஆராய்வு, இரட்சணிய நூல் ஆராய்வின் முடிவுரைத் தொகுப்பு எனப்பகுத்து இரட்சணிய யாத்திரிகத்தை ஆராய்ந்துள்ளார். இறுதியாகத் தான் எழுதிய இயேசுபுராணத்தையும் ஆய்வுசெய்துள்ளார். ஈழத்துப் பூராடனாரின் இயேசு புராணம், இயேசு புராண இலக்கிய நூல் ஆராய்வு, இயேசு புராண நூல் நூற்பதிப்பு பற்றிய ஆராய்வு, பரமபிதாப் பருவ நூலாராய்வு, பரமசுதன் பருவம், பரிசுத்தாவிப்பருவ நூலாராய்வு ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வை மேற்கொண்டு இறுதியில் நூலாராய்வுகளின் முடிவுரை, ஒரு படைப்பாளியின் தகவல் ஆராய்வு ஆகிய இயல்களில் அனைத்தையும் தொகுத்துக்கூறியுள்ளார். அமரர் நா.சா.கதிர்காமத்தம்பி நினைவு நிதிய ஆதரவில் வெளிவரும் இது ஒரு நிழல் வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47042).

ஏனைய பதிவுகள்

12565 – தமிழ் மொழி விளக்கம் இரண்டு பகுதிகள் அடங்கியது.

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், உதவி அதிபர், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, சித்தன்கேணி, 3வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, பங்குனி 1953, 2வது திருத்திய பதிப்பு, 1954. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

12360 – இளங்கதிர்: 31ஆவது ஆண்டு மலர் 1997-1998.

அ.ப.மு.அஷ்ரப், செல்வி இரா. சர்மிளாதேவி (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1998. (களுபோவில: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, தெகிவளை). xii, 160 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12728 – புத்திமான் பலவான் (சிறுவர் கதைகள்).

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681,காங்கேசன்துறை வீதி). vi, 56 பக்கம், விலை: ரூபா 150.,

14610 செவ்விலை.

ஓ.ஏ.வேலுசாமி. பண்டாரவளை: ஏ.தியாகலிங்கம், தலைவர், தமிழ் இலக்கியப் பேரவை (ஊவா), 282/11A, பதுளை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பண்டாரவளை: W.A.S.அச்சகம்). xiv, 77 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5×14.5

14608 சியக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்.

அனாதியன் (இயற்பெயர்: மார்க் ஜனாத்தகன்). கனடா: ஐங்கரன் கதிர்காமநாதன், நிறுவுநர், படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvii, 80 பக்கம்,விலை: ரூபா