12855 – சீறாவின் இயங்கியல்.

ஏ.பீ.எம். இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21 x 14.5 சமீ.

தாகம் தீராத பாலை நிலத்தைப் போன்றே பிரச்சினைகளும் தீர்வுகளும் இருக்கின்றன. நீர் புகட்டப்படும் போதெல்லாம் இன்னும் நீர் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. பாலையின் தாகம் தீர்வதில்லை என்பதைப்போல் எமக்குத் தேவையான சமூக மாற்றமும் இன்னும் நிகழவில்லை. மனித இன வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர் என்ற வகையில் நபிகளாரின் சீறாவில் இயங்கிவந்த விதிகளையும் உண்மைகளையும் இந்நூல் தொகுத்தாய்வு செய்கின்றது. முன்னுரை, வரலாறும் இயங்கியலும், சீறாவில் மாறாததும் மாறக் கூடியதும். ஒவ்வொரு நபிக்கும் ஓர் எதிரி உண்டு, பொதுக் குறிக்கோளும் கிளை இலட்சியங்களும், முதன்மையான இலக்கைத் தேர்வுசெய்தல், சமகால கிளைக் குறிக்கோள்கள், முறைவழிகளின் பன்மையும் வகைமையும், சீறாவில் சமூகமாற்றமுறை வழிகள், மக்கா காலகட்ட முறைவழி, மதினா காலகட்ட முறைவழி, சீறாவும் வன்முறையும், போராட்டத்தில் வலுசமநிலை, சீறாவும் வலுசமநிலையும், கோட்பாட்டாக்கம் தொடர்பாக, சீறாவில் ஒப்பந்தங்கள், சீறாவும் தற்காலப் போராட்டமும், மக்கள் சக்தியைத் திரட்டுதல் ஆகிய அத்தியாயங் களினூடாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37736).

ஏனைய பதிவுகள்

12147 – திருமந்திரம் அடிப்படையில் யோகர் சுவாமிகள் அறிவுரைகள்.

எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்). 213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர்

12438 – வெளி: நான்காவது ஆண்டு மலர் 2004.

த.சேரலாதன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு:மாணவர் அவை, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வதுபதிப்பு, 2004. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி). ix, 117 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

14952கலைஞர் தமிழ்.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள்,

14799 மறுபடியும் நாங்கள்.

இந்துமகேஷ் (இயற்பெயர்: சின்னையா மகேஸ்வரன்). ஜேர்மனி: சி.மகேஸ்வரன், Volta Str. 51, 2800 Bremen-33, West Germany, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (கல்லச்சுப் பிரதியாக்கம்). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15

12731 – மாணவர் கட்டுரைக் களஞ்சியம்.

லீலாதேவி ஆலாலசுந்தரம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 46 பக்கம்,