12864 – பொச்சங்கள்.

வ.அ.இராசரெத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்குகிழக்கு மாகாண அரசு).

(16), 17-175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17 x 11 சமீ.

ஆசிரியர் தான் வாசித்தறிந்த பல்துறைசார்ந்த நூல்களைப் பற்றிய ஓர் அசைபோடலாக அல்லது இரைமீட்டலாக இந்நூல் அமைந்துள்ளது. 1925 இல் பிறந்து 1946 இல் தமது 21 வயதில் இலக்கியப் பிரதிகளை எழுதத்தொடங்கிய வ.அ. இராசரத்தினம் தமது மறைவு வரையில் எழுதிக்கொண்டே இருந்தார். தினக்குரல் ஞாயிறு இதழில் பொச்சங்கள் என்ற தலைப்பிலும் அவர் இறுதியாக நீண்ட தொடரை எழுதி ஓய்ந்தார். தினக்குரல் ஞாயிறு இதழில் வெளிவந்த அவரது தொடரே ‘பொச்சங்கள்’ என்ற அதே தலைப்பில் இப்பொழுது நூலுரு வாகியுள்ளது. இதில் நிகண்டு, இலக்கண நூல், செம்மீன், சிங்கள நாவல், அரும்பிய முல்லை, திவ்யப் பிரபந்தம், விவிலியம், உலக சரித்திரம், மட்டக்களப்புத் தமிழகம், நம்பியகப்பொருள், யாப்பு, தண்டியலங்காரம், உள்மன யாத்திரை, மதங்க சூளாமணி, தேம்பாவணி, பந்த நூல், குறும்பா, உருவகக் கதைகள், மகாபாரதம், பூர்த்தியடையாத மட்டக்களப்புக் காவியம், சிறுவர் இலக்கியம், சரணம்(மலையக நாவல்), ஒரு பறவையின் பாடல், கண்டியரசன் நாடகம், பெ.பொ.சி. கவிதைகள், சரித்திர நாவல், திருக்கடைக்காப்பு ஆகிய 27 தலைப்புகளில் இத்தொடர் எழுதப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23154).

ஏனைய பதிவுகள்

12812 – மறுபிறப்பு (சிறுகதைத் தொகுப்பு).

வை.கஜேந்திரன். மன்னார்: தமிழமுது நண்பர்கள் வட்டம், 10/38, முதலாம் ஒழுங்கை, எமில் நகர், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xvi, 112 பக்கம், விலை:

14889 இலங்கை தேசப்படத் தொகுதி: முதலாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 172 பக்கம், வரைபடங்கள்,

12306 – கல்விக்கான உரிமையும்உலகளாவிய ஏற்பாடுகளும்.

அல்-ஷெய்ஹ் எம்.முஹம்மத் ஜவாத். மூதூர் 05: அல்-ஹுஸ்னா பவுண்டேஷன், அரபிக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி). x, 134

12838 – திருக்குறள்-ஒழிபியல்: பரிமேலழகர் உரை விளக்கம்.

பண்டிதமணி மு.கந்தையா. யாழ்ப்பாணம்: ஏழாலை கலாநிதி பண்டிதர் மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). xvi, 193 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5 x

12169 – முருகன் பாடல்: மூன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

14114 ஐங்கர அமர்தம் இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப பிள்ளையார் மணிமண்டபத் திறப்புவிழா சிறப்பு மலர் ; 2004.

மலர்க் குழு. இணுவில்: ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B , புளுமெண்டால் வீதி). (30), 192 பக்கம்,