12871 – மறைந்த நாகரிகங்கள்.

ந.சி.கந்தையா. சென்னை 600017: அமிழ்தம் பதிப்பகம், யு 4, மாதவ் குடியிருப்பு, 5 டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1950. (சென்னை 600 017: தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்).

xii, 148 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21 x 14 சமீ., ISBN: 81-7269-019-3.

‘இவ்வுலகின் பழைய நாகரிகங்களை எல்லாம் ஆராய்ந்து நோக்கின் அவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படை உண்டு என்பது தௌ;ளதில் தோன்றும். அவ்வடிப்படைதான் யாது என அறிதல் ஆராய்ச்சி வல்லார்க்கெல்லாம் பெரு மயக்கம் அளிப்பதாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின்னர் பழஞ்சரித்திர ஆராய்ச்சியிற் றலைமை சான்ற டாக்டர் பிராங்போர்ட் போன்ற சிலர் சிந்துவெளி நாகரிகமே பழைய நாகரிகங்களுக்கு எல்லாம் அடிப்படை யாகவுள்ளதெனத் தமது கருத்தினைத் தயக்கமின்றி வெளியிட்டுள்ளனர். சிந்துவெளி நாகரிகம், ஆராய்ச்சியில் திராவிடருடைய நாகரிகமாகவும், திராவிடருள்ளும் தமிழருடையதாகவும் காணப்படுதல் மிக வியப்பளிப்பதேயாகும். பழைய நாகரிக மக்களின் வரலாறுகளை ஒரு சிறிதளவாவது அறிந்திருப்பின் அன்றோ அவை தம்மை ஒப்பிட்டு அவைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல் சாலும். இச்சிறிய நூல் அவ்வழியில் ஊக்குதற்கு எழுந்த ஒரு சிறு நூலாகும்.’ நூலாசிரியர், முன்னுரையில். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36774).

ஏனைய பதிவுகள்

12234 – புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்.

மனித உரிமைகள் அமைப்பு. வெளியீட்டுத் தகவல் தரப்படவில்லை. (கொழும்பு 10: Associated Newspapers of Ceylon Ltd, 35, D.R. Wijewardena Mawathe). 42 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5

12339 – இந்து நாதம்: 1994.

கு.திவாகரன் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

14972 மனப்பால்.

கா.பொ.இரத்தினம். வேலணை: கா.பொ.இரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, ஆவணி 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: 60 சதம், அளவு: 20.5×13.5 சமீ. இலங்கையின் தேசிய

14516 தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி நான்கு.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ, 1வது பதிப்பு, மார்கழி 1992. (கனடா M5S 2W9: ஜீவா

13000 – முதல் நெருப்பு: தாய்த்தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப்.

சே.ஜெ.உமர்கயான். தமிழ்நாடு: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், 105, ஆர்.பி.ஆர். வணிக வளாகம், குமரன் சாலை, திருப்பூர் 641 601, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (திருப்பூர்: 641 608: எழில்

14077 போர்த்துக்கேயர் அழித்த பெந்தோட்டை காளிகோயில்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 55