12883 – மலேயா-இந்தியா யாத்திரை.

கா. இராமநாதன் செட்டியார். சுழிபுரம்: திரு.பே. கிருஷ்ணர், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).

iv, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.

தனது மலேயா-இந்திய யாத்திரை பற்றிய பிரயாண நூலாக இதனை தமிழகத்தின் கா.இராமநாதன் செட்டியார் அவர்கள் எழுதியுள்ளார். நல்ல கூட்டம் (குழுவினர், விருந்து, நாய்க்கடி), பிரயாணம் (பினாங்கு, கப்பல், முதல் வரவேற்பு), மலையில் (சுப்பிரபாதம், அகண்ட பஜனை, காஞ்சியின் பெருமை), குமரியும் கிழவனும் (காஞ்சியின் பெருமை, காமாட்சி, சேவாஸ்ரமம், அன்பால் கஷ்டம்), தலைநகர் (ஆக்ரா, டெல்லி, இராஜகாட், சட்டசபை, தொலைந்தது), குருபுங்கவர், விடுதலை (ஹரித்துவாரம், திருவேணி, காசிநாதர், கேதாரிநாதர்), ஏழைப்பூசாரி, அரசாங்க பஸ், பெருஞ்சோதி, வருமோ (பழநி, ஆவினன்குடி), அவனாட்சி, காவேரிக் கரையில், கோவில், பிறந்த ஊர், சோழநாடு, சிவலோகம் ஆகிய 17 தலைப்பு களில் இப்பிரயாணநூல் சுவையான அனுபவப் பகிர்வாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4040).

ஏனைய பதிவுகள்

14202 தமிழ் வேதப்பாமாலை.

அருள் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, மார்ச் 1995. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14090 உலக சைவப் பேரவையின் யாப்பு.

உலக சைவப் பேரவை. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. 1998

14250 சமூகக் கல்விப்பாடத்துக்கான தேசப்படப் பயிற்சி 10-11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 14ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1986. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14367 இந்து தீபம்: 2001.

க.முரளிதரன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கொழும்பு: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ்). 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 12.08.2001 அன்று

14109 ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக மலர்.

யாழ்ப்பாணம்: தர்மபரிபாலன சபை, ஆத்தியடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஜனவரி 1983. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 17 B, ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை). 64 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14101 இந்து தருமம் 1962-63.

வ.கணபதிப்பிள்ளை, கு.கல்வளை சேயோன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (12), 1-84+1-40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,