12897 – திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

எஸ்.நடராஜன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-8354-76-6.

இந்நூலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் ஐம்பது வருடகால வரலாற்றின் ஒரு வெட்டுமுகத்தை ஆசிரியர் காட்சிப் படுத்தியுள்ளார். நீண்ட கால அனுபவம் மிக்க ஊடகவியலாளர் எஸ். நடராஜான் ஞானம் சஞ்சிகை யில் 2006 ஜுன் இதழிலிருந்து 2007ஜுன் இதழ் வரை தொடராக எழுதிய தனது ஒலிபரப்புத்துறை அனுபவங்களே இந்நூலாகும். 87ஆவது அகவையில் இவர் எழுதிய முதலாவது நூல் இது. 30 வருடங்களுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையிலும் 20 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்புத் துறையிலும் பணியாற்றி வந்தவர் எஸ். நடராஜன். யாழ்ப்பாண மாவட்டத்தின் புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் அஞ்சல் நிலையப் பொறுப்பாளராகவிருந்த சோமசுந்தர ஐயர்-மனோன்மணி தம்பதியினரின் மூத்த புதல்வரான இவர், இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பவராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலி மாமாவாக அரும்பணியாற்றியவர். இவர் கும்பாபிஷேகம், தேர்த்திருவிழா என்பனவற்றின் நேர்முக வர்ணனையாளராகவும் இருந்துள்ளார். ரூபவாஹினியின் ‘ஐ’ அலைவரிசையிலும் செய்திவாசிப்பவராக இருந்து பின்னர் சைவ நீதி நிகழ்ச்சிக்குப் பங்களிப்பினையும் செய்துவந்தவர். (இந்நூலின் சரவைப்பிரதி கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58250).

ஏனைய பதிவுகள்

Lord Of The Ocean By Novomatic

Content Sevens&Fruits Slot móvel – Casinos Portugueses Licenciados Que Oferecem Anexar Lord Of The Ocean: Popular Greentube Slots Lord Of The Ocean Slot Game Images