12962 – பல்லவர் காலமும் பக்திக் கோலமும்.

க.நவசோதி. கொழும்பு: புத்தொளி வெளியீடு, 1வது பதிப்பு, பங்குனி, 1971. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 11 சமீ.

க.நவசோதி அவர்களின் பல்கலைக்கழகச் சொற்பொழிவொன்றினை குறிஞ்சிக் குமரன் கோயில் நிதிக்காக புத்தொளி வெளியீட்டகத்தின் இரண்டாவது வெளியீடாக வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்லவர் காலத்தின் சிறப்பினைக் கூறும் சொற்பொழிவினைக் கொண்ட இந்நூலில் முதுநெறி, தமிழர் நெறி, அந்நியர் வருகை, பரசமய எழுச்சி, பரநெறிகளின் விளைவு, வள்ளுவனின் சமரசம், பக்திமார்க்க மறுமலர்ச்சி, ஆரியச் செல்வாக்கு, ஒற்றுமைக் குரல், எதிர்ப்பியக்கம், வர்க்கப் போராட்டமல்ல, மன்னரின் பக்திக்கோலம், கோயில்களின் எழுச்சி, முற்பட்ட காலக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள், இராசசிம்ம முறை, பக்திக் கலைகள், பக்தி இலக்கியம் ஆகிய பல்வேறு உபதலைப்புகளின்கீழ் இவ்வுரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2654).

ஏனைய பதிவுகள்

12976 – வன்னியில் தமிழரசு: சிம்மக்குரலோன் செல்லத்ததம்பு அரச பேரவையில் ஆற்றிய உரைகள்.

சேவியர் மார்க் செல்லத்தம்பு (மூலம்), த.ம.பீற்றர் பொன்கலன்ட் (தொகுப்பாசிரியர்). நெடுங்கேணி: த.ம.பீற்றர் பொன்கலன்ட், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (கொழும்பு: அருளொளி அச்சகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 13.5

12889 – கோமாதா கருத்துக் களஞ்சியம்.

சு.செல்லத்துரை. இளவாலை: அன்னை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை நினைவு வெளியீடு, புனித வாசம், பத்தாவத்தை, 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சங்கானை: சாய்ராம் புத்தக நிலையம்). 35 பக்கம், தகடுகள்,

12897 – திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

எஸ்.நடராஜன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5 x

12898 – பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை.

ம.பா.மகாலிங்கசிவம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22 x 15

14305 சுயதொழில் வழிகாட்டி.

சி.வன்னியகுலம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: திட்டமிடல் பிரதிச் செயலர் அலுவலகம், நிதி திட்டமிடல் அமைச்சு, வடக்குகிழக்கு மாகாண சபை, 1வது பதிப்பு, மே 1992. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், திருக்கோணமலை, அன்பு ஒழுங்கை, உப்புவெளி). (12),