13018 காலம்: கவிஞர் செழியன் சிறப்பிதழ்.

செல்வம் அருளானந்தம் (இதழாசிரியர்). கனடா: செல்வம் அருளானந்தம், காலம், 84Coleluke Lane, Markham, Ontario, L3S 0B7, 1வது பதிப்பு, ஜுன் 2019. (இந்தியா: சென்னை 600 087: வீ.ஆர்.கிராப்பிக்ஸ், வளசரவாக்கம்).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 28×21.5 சமீ., ISBN: 1715-4030.

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் வழமையான அம்சங்களுடன், சிறப்புக் கட்டுரைகளாக செழியன் சிறப்பிதழ்-தோழர் செழியன் (ஸ்ரீதரன் திருநாவுக்கரசு), செழியன்: சில குறிப்புகள் (அருண்மொழி வர்மன்), முகில்களுக்கு மேலே நட்சத்திரங்களைப் பார்த்தவர் (மு.புஷ்பராஜன்), பால்வீதியில் ஒரு கவிஞன் (சி.ரமேஷ்), நண்பன் செழியனுக்கு (ஆனந்த பிரசாத்), செழியன்: நற்பண்புகள் நிறைந்த ஒரு மனிதன் (என்.கே.மகாலிங்கம்), செழியனின் வானத்தைப் பிளந்த கதை-எனது படிப்பனுபவம் (உஷா மதிவாணம்), கவிஞனை நினைவு கொள்வது எப்படி? (சேரன்), தவறுகளில் இருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்: செழியன் நேர்காணல் (‘காலம்” செல்வம் அருளானந்தம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்