13A16 – திருவாதவூரடிகள் புராணம்.

கடவுள் மாமுனிவர் ( மூலம்), ம.க.வேற்பிள்ளை (விருத்தியுரை). ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.சி.சண்முகம்பிள்ளை, அதிபர், சண்முகநாதன் புத்தகசாலை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, ஆடி 1931, 1வது பதிப்பு, 1895, 2வது பதிப்பு, 1915. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை).

iv, 156 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 20.5 x 14.5 சமீ

இந்நூலின் முதற் பதிப்பு 1895இல் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் தந்தையாரும், சிதம்பரத்திலுள்ள நாவலர் கலாசாலைத் தலைமையாசிரியருமாயிருந்த ம.க.வேற்பிள்ளையினால் எழுதி வெளியிடப்பட்டது. 1915இல் வண்ணார்பண்ணை எஸ்.எஸ்.சண்முகநாதன் அவர்களது புத்தகசாலையின் வாயிலாக இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இவ்விரண்டாம் பதிப்பு, அக்காலத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த பல்வேறு திருவாதவூரடிகள் புராண நூல்களிலும், உரைகளிலும் இருந்த பாடபேதங்கள், விபரீத உரைகள் என்பவற்றைக் கண்டித்தும் முன்னைய பதிப்பைப் புதுக்கியும் வழங்கியிருந்தது. இரண்டாம் பதிப்பின் மீள்பதிப்பே இந்நூலாகும். இது சிறப்புப்பாயிரம், உரைப்பாயிரம், பாயிரம், மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் ஆகிய இயல்களில் விரித்து எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2441. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11229).

ஏனைய பதிவுகள்

14840 கேண்மை.

ஐயாத்துரை சாந்தன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 160 பக்கம், விலை: ரூபா 450.,

12018 சிறுவர் உளநலம் : ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்.

சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ

12997 – ஈழ நாட்டுப் பிரயாணம்.

பகீரதன். சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 1வது பதிப்பு, 1959. (சென்னை: நவபாரத் பிரஸ்). 272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ. இலங்கையின் மலையகம் உள்ளிட்ட

14383 கல்வி பொதுத்தராதர பத்திரம் (உயர் தரம்) ஆண்டு 12-13: விலங்கியல் பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: NIE Press). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ. 1995 தொடக்கம் ஆண்டு

12323 – தொலைக் கல்விப் பாடநெறிகள்: கைந்நூல்.

தொலைக் கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: Pacific Press). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. தொலைக்கல்வி ஆசிரியர் கல்விப்

14470 சித்த மருத்துவம் 1990/91.

என்.ஸ்ரீசுப்பிரமணியம் (இதழாசிரியர்), க.ஸ்ரீதரன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xviii, 64 பக்கம், தகடு, விலை: