14007 உலகத் தமிழர்ஆவணக் காப்பகம்: ஓர் அறிமுகம்.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம். கண்டி: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், ஹெட்டியாவத்தை, முல்கம்பொலை, 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 26 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22X14 சமீ. உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் கண்டியில் இலங்கைத் தமிழர் தொடர்பான பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒர் ஆவணக் காப்பகமாக உருவாக்கப்பட்டிருந்தது. இது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அணுக்கத் தொண்டராகவிருந்த குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் 45 ஆண்டுப் பணியால் உருவாக்கப்பட்ட ஆவணக் காப்பகம் ஆகும். குறிப்பாக இந்த ஆவணக் காப்பகத்தில் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாறு திரட்டப்பட்டிருந்தது. இதில் ஒரு பகுதி ஆவணங்கள் மைக்ரோ பிலிம்களாக (200) யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் சுவிற்சர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகை இன்னும் மைக்ரோ பிலிம்களாக பதிவுசெய்யப்பட வேண்டியிருந்தன. இது கண்டியில் நிலவிய பாதுகாப்பின்மையால் 2000களில் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இலங்கைப் படையினரால் கிளிநொச்சி அழிக்கப்பட்டபோது இந்த ஆவணக்காப்பகமும் அழிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24858).

ஏனைய பதிவுகள்

14857 வாழ்வியல்: அனுபவ பகிர்வு பாகம் 1.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (திருக்கோணமலை: A.R.Trader, திருஞானசம்பந்தர் வீதி). 152 பக்கம், விலை: ரூபா 250.00,

12634 – சித்த மருத்துவம் 1988/1989.

S.யோகேந்திரன், டீ.சைலஜா (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xvi, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18

12203 – சமூகக் கல்வி: 11ஆம் ஆண்டு.

எம்.சீ. த சில்வா, பத்மினீ என்.பெரேரா, ரஞ்சினி சேனாநாயக்க (பதிப்பாசிரியர்கள்), ஐ.தம்பிமுத்து (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 6வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1987. (அம்பலாங்கொடை: மஹிந்த பிரின்டர்ஸ், இல.

14316 நீதிமுரசு 1978.

கல்யாணி நடராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1978. (பருத்தித்துறை: குமார் அச்சகம்). (160) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

13A09 – சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, ஆடி 1912, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை). 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14664 பூவரசம்பூ.

மகாகவி அல்லாமா இக்பால் (உருது மூலம்), வ.அ.இராசரத்தினம் (தமிழாக்கம்). மூதூர்: தங்கம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (மூதூர்: அமுதா அச்சகம்). 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ. மகாகவி