14022 தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன் (பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரை).

தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, வைகாசி 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 40 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14 சமீ. தன் ஆத்மாவைத் தேடி அலையும் மனிதன். தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: அமரர் தம்பு தாமோதரம்பிள்ள நினைவுப் பதிப்பு, இணுவில், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 14.5 சமீ. பேராசிரியர் தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள மருத்துவத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் நினைவுப் பேருரையாக அவரால் 18.05.1994 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் நூல்வடிவத்தின் மீள்பதிப்பாக இப்பிரசுரம் வெளிவந்துள்ளது. உலக வாழ்க்கையில் ஒவ்வொரு ஆதாரத்திலும் பள்ளிக்கூட வகுப்புகள் போல அத்தரத்துக்கான பாடப்படிப்பு முடிந்து தேர்ந்த பிறகு, அடுத்த வகுப்புக்குஆதாரத்துக்கு மனிதன் உயர்த்தப்படுகின்றான். இன்னொரு வகையில் கூறுமிடத்து குண்டலினி எந்த ஆதாரத்தில் நிலைகொள்கின்றதோ அதற்கு ஏற்றவாறு அந்த மனிதனின் தனு, கரண, புவன, போகங்கள் அமைகின்றன என்றவாறாக மனிதனின் ஆத்மா பற்றிய நுணுக்கங்களை இப்பேருரை விளக்குகின்றது. யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கணேஷ் என்றழைக்கப்பட்ட அமரர் தம்பு தாமோதரம்பிள்ளை (26.06.1929-27.07.2019) அவர்களின் நினைவு மலராக 25.08.2019 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவர் நுவரெலியா, வட்டகொடவில் உள்ள மெடேகொம்பர அரச பெருந்தோட்டத்தின் தலைமைக் களஞ்சியப் பொறுப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22299).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

12561 – தமிழ் மலர்: மூன்றாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xv, 205 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.95, அளவு: 20.5×16.5 சமீ.

14421 மொழிபெயர்ப்பு மரபு.

எப்.எக்ஸ்.சி.நடராஜா (இயற்பெயர்: பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா). கொழும்பு: கலைமகள் கம்பெனி, 124 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1954. (சென்னை 1: ஸ்ரீமகள் அச்சகம்). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14954 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா நினைவு மலர்: 03.05.1992.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xix, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

14458 பிரவுணிங்கு, யோசேப்பு ஆகியோரின் செய்முறை இரசாயனம்.

எரிக்கு.L.பொன்சேக்கா, P.P.G.L.சிறீவர்த்தனா (ஆங்கில மூலம்), வே.பேரம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 58, சேர் ஏணெஸ்ட் டி சில்வா மாவத்தை, மீள்பதிப்பு, 1978, 1வது பதிப்பு, 1957, 2வது பதிப்பு,