14050 திருச்சபை வரலாற்றுத் துளிகள்.

சா.பி.கிருபானந்தன். யாழ்ப்பாணம்: தூய பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு: கத்தோலிக்க அச்சகம்). (30), 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 29.5×21 சமீ. ஈழத் தமிழ் கிறிஸ்தவ பண்பாட்டுத் தளத்தின் வரலாற்று அசைவியக்கத்தின் மூல வேர்களைத் தேடும் முயற்சியே இந்நூலாகும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ பண்பாட்டுப் புலத்தில் அடையாளங்கள், குறியீடுகள், மொழிகள், சடங்குகள், பக்தி முயற்சிகள், பொது நிலைப் பணி இயக்கங்கள், மற்றும் தொடக்ககால இலக்கிய முயற்சிகள் போன்றவை ஆசிரியரின் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42755).

ஏனைய பதிவுகள்