14078 மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையின் சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்.

நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 1வது பதிப்பு, 1896. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxiv, 104+10 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-7347-01-1. சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் என்ற இந்நூல், நல்லை நகர் ஆறுமுகநாவலரின் மாணவ பரம்பரையைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) அவர்களால் இயற்றப்பட்டு சென்னை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் துர்முகி ஆண்டு ஆனி மாதம் (1896) அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. மீண்டும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான தி.செல்வமனோகரன் அவர்களால் இந்நூல் 2017இல் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. இம்மீள்பதிப்பின் முதற் பகுதியில் வெளியீட்டுரை, அணிந்துரை, முன்னுரை, சிறப்புப் பாயிரம் என்பனவும், இரண்டாம் பகுதியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சிவ விளக்கம், ஷேத்திராலய விளக்கம், மகோற்சவ விளக்கம் என்பனவும், மூன்றாவது பகுதியில் பின்னிணைப்புகளாக கதிரைவேற்பிள்ளையும் காலப் பின்புலமும், கதிரைவேற்பிள்ளையின் வகிபாகம் ஆகிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, தனது முதலாவது பிரசுரமாக இந்நூலை வெளியிட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

12113 – புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர்: 11.6.2001.

மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மன்னார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: வானதி பிரின்டர்ஸ், 171, ஸ்ரீகதிரேசன் வீதி). (24),

14807 யக்கடையாவின் வர்மம்: துப்பறியும் நாவல்.

M.A.அப்பாஸ். கொழும்பு 11: விஸ்டம் ஹவுஸ் (அறிவகம்), இல. 7, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1957. (கொழும்பு 11: ஆவ்ரா அச்சகம், 19, செட்டியார் தெரு). (4), 135 பக்கம், விலை:

14994 அது இது எது: தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள்.

முத்தையா வெள்ளையன். சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 150 பக்கம், விலை: இந்திய ரூபா

12334 – முரண்பாட்டுத் தீர்வுக்கான கல்வி: ஆரம்பக் கல்வி ஆசிரியர் கைந்நூல்.

பதிப்பாசிரியர் குழு. மஹரகம: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை). 58 பக்கம், சித்திரங்கள், விலை:

14908 மூதறிஞர் பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்.

கே.கே.சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). தெகிவளை: கே.கே. சுப்பிரமணியம், 28, இரத்தினகார இடம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 110 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14337 மக்கள் சேவையில் ஈராண்டு.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா நகர சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (கொழும்பு 2: வெட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை).(2), 68 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14