14120 கனடா மொன்றியால் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர்-1995.

மலர்க்குழு. கனடா: அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில், 71,Jean-Talon Quest Montreal,Quebec H2R 2X8 1வது பதிப்பு, 1995. (கனடா: குவாலிட்டி பிரின்டிங் சேர்விசஸ்). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ. இம்மலரில் வாழ்த்துரைகள், ஆசியுரைகள் ஆகியவற்றுடன் கோவில் நிர்மாணிப்பு தொடர்பான தகவல்கள், ஆவணப் புகைப்படங்கள், சமய இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றுள்ளன. கவிதைகளை வி.கந்தவனம், வசந்தம், பாலரேணு, பவளம் சண்முகம் ஆகியோர் படைத்துள்ளனர். சமய இலக்கியக் கட்டுரைகளை சிவஸ்ரீ விஸ்வநாராயண சர்மா, சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்கள், ஆத்மஜோதி நா.முத்தையா, க.சண்முகம், மீனா தவரட்ணம், ராதாகிருஷ்ணன், சங்கரப்பிள்ளை திருநடராசா, சின்னையா சிவநேசன் ஆகியோர் எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 39863).

ஏனைய பதிவுகள்