க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பன் இல்லம், இல. 69, வான்றோயன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 14: எக்செலென்ட் பிரின்டர்ஸ், குபு1இ சமகிபுர தொடர்மாடி, சென்.ஜோசப் வீதி). (32), 145 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. இலங்கையில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடுகள், சபரிமலை புனித யாத்திரை நடத்தும் அமைப்புக்கள், சங்கங்கள், சந்நிதானங்கள், தேவஸ்தானங்கள் பீடங்கள் பீடாதிபதிகள், இந்துமத பாராளுமன்ற உறுப்பினர்கள் குருஸ்வாமிகள் மற்றும் அடியார்களுக்கு உதவும் வகையில் 20ஆவது மண்டலபூஜையையொட்டி வழிபாட்டுப் பாடல்களுடன் கூடியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34408).
14007 உலகத் தமிழர்ஆவணக் காப்பகம்: ஓர் அறிமுகம்.
குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம். கண்டி: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், ஹெட்டியாவத்தை, முல்கம்பொலை, 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 26 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22X14 சமீ. உலகத் தமிழர்