14192 கேதாரீஸ்வரர் விரத மகிமை. அம்பிகா பான்சி றேடர்ஸ் (தொகுப்பாசிரியர்கள்).

யாழ்ப்பாணம்: அம்பிகா பான்ஸி றேடர்ஸ், 9, நவீன சந்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம், 575, காங்கேசன்துறை வீதி).16 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18.5×12.5 சமீ. 1.11.1986 அன்று, வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயத்தில் (நாச்சிமார் கோவில்), கேதாரகௌரி விரத நாளன்று அமரர்கள் சின்னையா முத்துக்குமாரு, செல்லம்மா முத்துக்குமாரு ஆகியோரின் ஞாபகார்த்தமாக அம்பிகா பான்சி றேடர்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளரால் வெளியிடப்பெற்ற சிறு நூல் இது. வரலாறும், விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், பயன்களும் பற்றிய அறிமுகக் கட்டுரையுடன், கேதாரீஸ்வரர் விரத நோன்பு பூஜாவிதி, மந்திர சுலோக தோத்திரங்கள் என்பனவும் இதில் இடம்பெற்றுள்ளன. கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்ற படியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003001).

ஏனைய பதிவுகள்

12668 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1998.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, 35ஆவது மாடி, மேற்குக் கோபுரம், உலக வர்த்தக நிலையம், எக்சலன் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல்

14960 முருகையன் எனும் முடியா நெடும்பகல்: கவிஞர் இ.முருகையன் நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 11: தேசியகலை இலக்கியப் பேரவை, இல.44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம்,

12859 – வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரத மூலம்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை (புத்துரை). யாழ்ப்பாணம்: வீ.நாராயணசுவாமி நாயுடு இணை வெளியீடு, மு.மூத்ததம்பிச் செட்டியார், 1வது பதிப்பு, ஜுலை 1886. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). 320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24

14349 அரசியலும் கல்வியும்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). viii, 148 பக்கம், விலை: ரூபா 460., அளவு:

12641 – சேதனப் பசளைகள்.

S.T.திசாநாயக்க, ராஜகருணா தொலுவீர, சீரங்கன் பெரியசாமி. பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 2000. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை). (2), 18 பக்கம், விளக்கப்படங்கள்,

12432 – யாழ்நாதம்: இதழ் 9-2003.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 72 பக்கம்,