14253 சமூக அறிவு: தொகுதி 1, இதழ் 1/2-ஆடி 2004.

வி.நித்தியானந்தம் (பிரதம ஆசிரியர்), கணேசலிங்கன் குமரன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 1வது பதிப்பு, ஆடி 2004. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). 189 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-9830. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.நித்தியானந்தனை ஆசிரியராகவும், பேராசிரியர்களான கா.சிவத்தம்பி, நா.பாலகிருஷ்ணன், அ.சிவராசா, சோ. சந்திரசேகரன், எம்.எல்.ஏ.காதர், வி.பி.சிவானந்தன், க.ரகுராகவன் ஆகியோரை ஆலோசகர் குழுவாகவும் கொண்டு வெளியிடப்பட்ட சமூகம் அதன் அசைவியக்கம் பற்றிய ஓர் ஆய்விதழ் இது. இவ்விதழில் ‘கட்டுரைகள்” என்ற பிரிவில் யாழ்ப்பாணசசமூகப் பாரம்பரியத்தில் கட்டடம் பற்றிய எண்ணக்கரு (கார்த்திகேசு சிவத்தம்பி), நிறுவன கோட்பாடுகளும் சந்தைப்படுத்தல் ஆய்வுகளும் அவை மத்தியிலான கருதுகோள் ரீதியான தொடர்பு (க.ரகுராகவன்), ஈழத்தமிழரும் மருத்துவக் கல்வியும்: அதன் சமூகப் பொருளாதார பரிணாமம் (வி.நித்தியானந்தம்), மேலாதிக்கமும் அதன் தடுமாற்றமும் (நோம் சொம்ஸ்கி), மோதலும் மோதல் தீர்வும் (ஜயதேவ உயங்கொட) ஆகிய ஆறு கட்டுரைகளும், ‘நூல் ஆய்வு” என்ற பிரிவில் வடக்கு கிழக்கு நிலைமையின் பின்னணியில் வறுமைக் குறைப்பும் இலங்கையை மீட்டெடுத்தலும் (வி.நித்தியானந்தம்), சங்க கால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும் (கார்த்திகேசு சிவத்தம்பி) ஆகிய கட்டுரைகளும், ‘நூல் விமர்சனம்” என்ற பிரிவில் இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்கு கிழக்கு பரிமாணம் (ந.பேரின்பநாதன்), உலக அபிவிருத்தி அறிக்கை -2004: சேவைகளை வறியோருக்காக இயங்கவைத்தல் (க.சண்முகலிங்கம்) ஆகிய கட்டுரைகளும், ‘அஞ்சலி” என்ற பிரிவில் எட்வர்ட் சயித் (1935-2003), போல் மார்லர் சுவிசி (1931-2004) ஆகியோர் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13699).

ஏனைய பதிவுகள்

12916 – மனிதருள் மாணிக்கம்: அப்துல் அஸீஸ்.

பி.எம்.லிங்கம். கொழும்பு 12: அஸீஸ் மன்ற வெளியீடு, 17, புதிய சோனகத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (8), 190 பக்கம், புகைப்படங்கள்,

14459 வேற்றுக் கிரக மனிதர்கள்.

கனி-விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா ரிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94:

14354 நன்றி மறப்போம்.

எஸ்.ஐ.நாகூர் கனி. கொழும்பு 12: மிஹிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய நலவுரிமைச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், J.L.G.4 டயஸ் பிளேஸ்). 56 பக்கம், விலை:

12404 – சிந்தனை: தொகுதி IV இதழ் ; 1 (மார ;ச் 1990).

ப.சிவநாதன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1990. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ், 267, பிரதான வீதி). 117 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா

14469 சித்த மருத்துவம் 1987.

சி.திலகேஸ்வரி (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: சிவா பிரின்டர்ஸ், த.பெ.எண் 1, கைதடி). xv, 74 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: