14260 யாத்திரை: சமூக ஆய்விற்கான இலங்கைச் சங்கத்தினது ஆய்விதழ்.

ஆர். ஒபயசேகரா, எம்.சின்னத்தம்பி, கே.டியுடர் சில்வா (ஆசிரியர்கள்). பேராதனை: எம்.சின்னத்தம்பி, சமூக ஆய்வுக்கான இலங்கைச் சங்கம், பொருளியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: றோயல் பிரிண்டர்ஸ், 190, கொழும்பு வீதி).எi, 64 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 21.5×14 சமீ. ஆசிய கல்விச் சங்கத்தினது தென்னாசிய சபையின் நிதியுதவியுடன் இவ்வாய்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழில் இலங்கையின் ஆரம்ப வரலாறு: இரு முகத் தோற்றங்கள் (எஸ்.ஜே.தம்பையா), முரண்பாடும் தீர்வும் பற்றிய ஒரு பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கதை (ரஞ்சினி ஒபயசேகரா, கணநாத் ஒபயசேகரா), புத்தரினது உறவினர்கள்: இலங்கையினது புராதன, மத்திய கால முற்பகுதி இராச்சியங்களில் கற்பிதக் கதைகள் அரசியல் பட்டயங்களாக விளங்கியமை (சு.யு.டு.ர்.குணவர்த்தன), இலங்கையில் பதட்ட நிலை முரண்பாடு என்பவற்றின் சமூக, அரசியல் அறிகுறிகள் (றொபர்ட் என்.கேர்ணி), பாரதர் (டீயசயவயள) இலங்கையினது ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் சமூக ஒருங்கிணைவு பற்றிய ஒரு ஆய்வு (சுதர்சன் செனவிரத்ன), துட்டகைமுனு அபயனது மனசாட்சி: அல்லது கற்பிதக் கதையினை ஆக்குவோனாக மானிடவியலாளர் (கணநாத் ஒபயசேகரா), பெருந்தோட்டப் பகுதிகளில் இனப்பிரச்சினை (கே.டியுடர் சில்வா), சிறுபான்மையினரின் நீதிக்காக புத்த மதத்தினர் (மஹிந்த பலிஹவதன) ஆகிய எட்டு ஆய்வுக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27160).

ஏனைய பதிவுகள்