எஸ்.ஜி.புஞ்சிஹேவா (சிங்கள மூலம்), எம்.எச். எம்.ஷம்ஸ் (தமிழாக்கம்). இராஜகிரிய: ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம், 1149, கோட்டே வீதி, 1வது பதிப்பு, மே 1998. (தெகிவளை: சரண பதிப்பகம், சரணங்கார வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. 1998 தை மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை கண்காணிக்கச் சென்ற குழுவில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான திரு. எஸ்.ஜி.புஞ்சிஹேவா அவர்களினால் சிங்கள மக்களுக்காக எழுதப்பட்ட சிறுநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவாகும். யுத்தத்தில் வென்றெடுத்தவை, யாழ்ப்பாணம்-ஒரே பார்வையில், உள்ளூராட்சி சபை தேர்தல், சிங்களவர் என்றால் இராணுவமே, 630 பிள்ளைகள் காணாமல் போயினர் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
12862 – திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை.
தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (14), 248 பக்கம், புகைப்படங்கள், விலை: