எச்.பி.நாயக்ககோராள (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கொழும்பு: மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவத் திட்டம், சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு, 30, லக்சபான மாவத்தை, ஜயந்திபுர, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 15 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ. மண்ணரிப்பு, மண் பாதுகாப்பு முறைகள், பொறியியல் முறை, உயிரியல் முறை, பயிராக்கவியல் முறை, மண் பாதுகாப்பு முறைகளைத் தெரிவுசெய்தல், பொறியியல்முறை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள், கட்டமைப்பும் கருத்திற் கொள்ளவேண்டிய விடயங்களும், கல்லணை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள், கட்டமைப்பும் கருத்திற் கொள்ளவேண்டிய அம்சங்களும் என இன்னோரன்ன வழிவகைகள் இச்சிறுநூலில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42733).
12449 – அகில இலங்கைத் தமிழ்த் தின விழா: மட்டக்களப்பு, 1970.
மலர்க் குழு. மட்டக்களப்பு: கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1970. (மட்டக்களப்பு: சென். செபஸ்தியன் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.