14332 பிள்ளையின் உரிமைகள் மீதான பட்டயம் (Children’s Charter).

புனர்வாழ்வு, புனரமைப்பு, சமூக சேவை அமைச்சு. கொழும்பு: புனர்வாழ்வு, புனரமைப்பு, சமூக சேவை அமைச்சும் சிறுவர் நல்லொழுக்க விசாரணைத் திணைக்களமும், 1வது பதிப்பு, 1991. (Colombo: Aitken Spence Printing, 90, St. Rita’s Estate, Mawaramandiya, Siyambalape). 20+21+25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×21 சமீ. இலங்கையிலும் அவ்வப்போது சிறுவர் பாதுகாப்புக் குறித்து பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சகலருமே சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர், சிறுமியர்களை பாதுகாப்பதற்கும், சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகள் பட்டயத்தை உருவாக்கியது. 1958 இல் ஐ.நா. சபை சிறுவர் உரிமைப் பட்டயத்தை பிரகடனம் செய்தது. 1989 நவம்பர் 09 இல் சிறுவர் உரிமை சாசனம் மீளவும் வலியுறுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2002 இல் ஐ.நா. மனித உரிமை அமையம் நிறைவேற்றிய 1325 ஆவது தீர்மானம் போர்ச் சூழலில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 38801).

ஏனைய பதிவுகள்

14031 சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் 200.

க.சற்குணேஸ்வரன். மட்டக்களப்பு: இராமகிருஷ்ண மிஷன், சிவானந்த வித்தியாலயம், கல்லடி-உப்போடை, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (மட்டக்களப்பு: கீன் அச்சகம்). (14), 36 பக்கம், தகடுகள், விலை: ரூபா 15.00, அளவு: 18×12 சமீ. நூலாசிரியரான

12017 – மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும்.

பாலு (இயற்பெயர்: சக்தி அ. பாலஐயா). கொழும்பு 12: போதனா பிரசுராலயம், 364, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1952. (கொழும்பு 13: நேரு அச்சகம், 94-1, மேட்டுத் தெரு, Hill

14198 சைவசமயத் திருமுறைப் பாராயணத்திரட்டு.

மகாதேவ ஆச்சிரமம். கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி). v, (4), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12721 – தமிழ் கலைவிழா 1994: சிறப்பு மலர்.

ஏ.எம்.நஹியா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (14), 98 பக்கம்,

14087 இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர்: மன்னார் மாவட்டம்.

மலர்க் குழு. மன்னார்: மாவட்ட விழாக் குழு, இரண்டாவது உலக இந்து மாநாடு-2003, மன்னார் மாவட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 108