14336 பிரதேச செயலகமும் பொது மக்களுக்கான சேவைகளும்-ஓர் அறிமுகம்.

சிவலிங்கம் புஷ்பராஜ், நயினாமலை முரளிதரன். கொழும்பு: மலையகப் பட்டதாரிகள் சமூகம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், து.டு.பு.4 டயஸ் பிளேஸ்). xxiv, 171 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISDN: 978-955-41479-0-4. நூலாசிரியர்களில் சிவலிங்கம் புஷ்பராஜ் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தராக கினிகத்தேனை, அம்பகமுவ பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார். நயினாமலை முரளிதரன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக மாத்தளை, இரத்தோட்டை பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார். பிரதேச செயலகங்களின் வாயிலாக பொது மக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய அறிவூட்டும் நல்நோக்கத்ததுடன் இந்நூல் பல்வேறு முக்கியமான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிர்வாகம், பிரதேச செயலாளர், நிர்வாகப் பிரிவு, பிறப்பு-இறப்பு மற்றும் திருமணப் பதிவாளர் பிரிவுகள், சமூக சேவைகள் பிரிவு, வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு, கணக்காளர் பிரிவு, காணி மற்றும் அனுமதிப்பத்திரப் பிரிவு, அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக் கொள்ளல், கிராம பிரிவுகள் மட்டத்திலான உத்தியோகத்தர்கள் என பத்துப் பெரும் பிரிவுகளின் கீழ் அவர்களின் கடமைகள், அவர்களின் மூலம் பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய பணிகள் பற்றி விரிவான தகவல்களை இந்நூல் தருகின்றது.

ஏனைய பதிவுகள்

12817 – இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் (நாவல்).

குடத்தனை உதயன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஆதிலட்சுமி ஆப்செட்). xii, 476

14582 எல்லையற்ற பெருவெளி.

க.முத்துராஜா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 90 பக்கம், விலை: ரூபா 450.,அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

14561 அம்மா எனும் ஆசியாவின் அதிசயம்.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). viii, 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

12790 – யூரிப்பைடசின் நாடகங்கள்: முதலாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9. 1வது பதிப்பு, ஐப்பசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்

14948 அகஸ்தியர் என்ற எங்கள் பப்பா 1926-1995.

நினைவு மலர் வெளியீட்டுக் குழு. பாரிஸ்: திருமதி நவமணி அகஸ்தியர், இல. 9, சுரந புயடடநசழnஇ 75020, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14721 வாழ்தல் மீதான வன்முறைகள்: சிறுகதைகள்.

காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). viiiஇ 09-80 பக்கம், விலை: